search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி ஒதுக்காததால் வெளிநடப்பு"

    • கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தங்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டி வெளியேறினர்
    • கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு பதில் அளித்த ஆணையர், என்னென்ன பணிகள் வேண்டும், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கவுன்சிலர்களை எழுதித்தரக்கூறினார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் வே.சிவகாமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும் தங்கள் பகுதிக்கு எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், நிர்வாகமே ஒப்பந்தங்களை கோரி அவர்களே பணிகளை மேற்கொண்டு விடுவதாக குற்றச்சாட்டினார்.

    இதற்கு பதிலளித்த ஆணையர், என்னென்ன பணிகள் வேண்டும், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கவுன்சிலர்களை எழுதித்தரக்கூறினார்.

    இதையடுத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தாள்கள் வழங்கப்பட்ட நிலையில் யாரும் எதையும் எழுதி தரவில்லை. மேலும். துணைத்லைவர் பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவசாமி, ஜெயலட்சுமி, செல்வி ஆகிய 4 அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் வெளியேறினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், தங்கள் வார்டு பணிகளுக்கு எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. அப்படியே வார்டுகளில் பணிகள் மேற்கொண்டாலும் அந்த பகுதிக்கு அவர்களே ஒப்பந்தம் விட்டு அவர்களே செய்துக்கொள்கின்றனர். அதனால் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்றனர்.

    ×