search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virender Sehwag"

    வங்கப்புலி, தாதா என செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று தனது 47வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். #HappyBirthdayDada
    கொல்கத்தா :

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்த நாள் இன்று... இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர்.

    ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு ஆடுகளத்தில் ஆக்ரோஷத்தை கற்றுக்கொடுத்த அவருக்கு பல்வேறு பிரபலங்களும் முன்னாள் இன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும்இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரான விரேந்திர சேவாக் அவருக்கே உரிய பாணியில், கங்குலி பேட்டிங் செய்யும் புகைப்படம், கங்குலி அடித்த பந்து பார்வையாளர் மீது பட்டு அவர் தலையில் ரத்தம் வரும் புகைப்படம், பந்துவீசும்போது காற்றில் கலைந்த முடியுடன் இருக்கும் கங்குல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் சட்டை கழட்டி சுழற்றிய புகைப்படம் உள்பட நான்கு படங்களை ட்விட்டரில் பதிவிட்டு கங்குலிக்கு வித்தியாசமாக 4 படிகளில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    படி 1: எழுந்திரு, கண்களை இருமுறை சிமிட்டி களத்தில் இறங்கி ஆடு.
    படி 2: பந்துவீச்சாளர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் அடித்து நொறுக்கிடு. (வன்முறையை குறிப்பிடவில்லை)
    படி 3: உன் பேட் மட்டும் சுழலவில்லை உத்வேகத்தோட்டு நீ பந்து வீசும் போது உன் தலைமுடியும் சுழலும்.
    படி 4: யாருமே பார்க்கவில்லை என்பது போல் வெற்றியை கொண்டாடு.

    இவ்வாறு சேவாக் பதிவிட்டுள்ளார். #HappyBirthdayDada
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் 72 வயது மூதாட்டியின் வீடியோ ஒன்றை பதிவு செய்து இவர்தான் என்னுடைய சூப்பர்வுமன் என குறிப்பிட்டுள்ளார். #VirenderSehwag
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் 72 வயது மூதாட்டி லக்‌ஷ்மி பாய் டைப் ரைட்டிங் செய்து கொண்டிருக்கிறார். வயதான காலத்தில் மிகவும் வேகமாகவும், ஆர்வத்துடனும் பணியாற்றும் அவரை சூப்பர்வுமன் என சேவாக் பாரட்டியுள்ளார். அனைவரும் இவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலையும் சிறிதல்ல. கற்றுக்கொள்வதற்கும், வேலைப்பார்ப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவர் விளங்கி வருகிறார். இவ்வாறு சேவார் டுவிட் செய்திருந்தார்.



    இதுகுறித்து பேசிய லக்‌ஷ்மி பாய், 'விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த என் மகளுக்காக நான் கடன் வாங்கினேன். அதனை திரும்பிச் செலுத்த எனக்கு இந்த வேலையை விட்டால் வேறு இல்லை. அதனால் தான் 72 வயதிலும் கடினமாக உழைத்து வருகிறேன். எனக்கு யாரிடமும் கையேந்தி நிற்க பிடிக்கவில்லை.

    என் வீடியோவை வீரேந்தர் சேவாக் வெளியிட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது கடன்களை அடைக்க மற்றும் சொந்த வீடு வாங்க உதவி செய்தால் நன்றாக இருக்கும்' என கூறினார். #VirenderSehwag
    மத்தியப்பிரதேச மாநிலத்தில் 72 வயதில் மின்னல் வேக டைப்பிங் செய்யும் மூதாட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். #MadhyaPradeshtypist #VirenderSehwag #LaxmiVerma

    போபால்:

    மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லட்சுமி வெர்மா (72) என்ற பெண்மணி டைப்-ரைட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த வயதிலும் அவரின் மிக வேகமாக டைப்பிங் செய்யும் திறமை உடையவர். லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அவர் பதிவு செய்திருந்த வாழ்த்து செய்தியில், “என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சூப்பர் பெண்மணி. மத்தியப்பிரதேச மாநிலம் சிஹோரில் வாழ்ந்து வரும் அவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு மரியாதையுடன் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். #MadhyaPradeshtypist #VirenderSehwag #LaxmiVerma
    இந்திய அணியில் சேவாக் அறிமுகம் ஆனபோது நடந்த விஷயங்களை ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார். #Sachin #Sehwag
    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள் இந்தியாவிற்காக தொடக்க வீரர்களாக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்- சேவாக் ஜோடி என்றால் அது மிகையாகாது. எந்தவொரு பந்து வீச்சாளராக இருந்தாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் வல்லமை படைத்தவர் சேவாக். பவுண்டரிகள் விரட்டி பந்து வீச்சாளர்களை சங்கடத்திற்குள்ளாக்குவதில் சச்சின் கில்லாடி.

    இருவரும் 10 ஓவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் எதிரணிக்கு அது பரிதாபமே. இந்த ஜோடி இந்தியவின் தலைசிறந்த ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ‘வாட் தி டக் 3 (What the Duck 3)’ தொடர்பான நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.



    அப்போது சேவாக் இந்திய அணியில் இணையும் போது நடந்தது என்ன? என்பதை இருவரும் நினைவு கூர்ந்தனர். சேவாக் அணிக்குள் நுழைந்த போது நடந்த சம்பவம் குறித்து சச்சின் கூறுகையில் ‘‘சேவாக் அணியில் நுழைந்தபோது அந்த சம்பவத்தை நான் நினைத்து பார்க்கிறேன். அப்போது சேவாக் என்னிடம் பேசமாட்டார். இருவரும் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டுமென்றால், சேவாக்கை அதற்கு ஏற்றபடி தயார்படுத்த வேண்டியது அவசியம்.



    இதற்கு நாம் ஒருவருக்கொருவர் பேச வேண்டும். இல்லையென்றால், வேலைக்காகாது என்று நானை நினைத்தேன். ஆகவே, நான் அவரிடம் வாங்கள் சாப்பிட போகலாம் என்றேன். சாப்பிட செல்லும்முன் நான் அவரிடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்றேன். அதற்கு அவர் பாஜி (Paaji), நான் சைவம் என்றார். நான் எதற்கு என்று கேட்டபோது, வீட்டில் உள்ளவர்கள் சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று விவரித்தார்’’ என்று சிரித்தபடியே சச்சின் தெண்டுல்கர் கூறினார்.



    சேவாக் கூறுகையில் ‘‘நான் முதன்முறையாக சச்சினை சந்தித்த போது, என்னுடன் சற்று கைக்குழுக்கி விட்டு சென்றுவிட்டார். அப்போது, தன்னுடைய கிரிக்கெட் ஆசைக்கு முன்னோடியே சச்சின் தெண்டுல்கர்தான். அவரே சற்று கைக்குழுக்கிவிட்டு சென்று விட்டாரா? என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். பின்னர், நான் சீனியர் வீரராக இருக்கும்போது, புதிய வீரர்களிடம் இதுபோன்றுதான் செய்தேன். பின்னர், எந்தவொரு மனிதரிடமும் அவரைப் பற்றி தெரிவதற்கு முன் நெருக்கமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். நான் முதன்முறையாக அணியில் இணையும்போது மிகவும் வெட்கப்பட்டேன்’’ என்றார்.

    சச்சின் தெண்டுல்கர் - சேவாக் ஜோடி இந்திய அணிக்காக 93 ஒருநாள் போட்டியில் இணைந்து விளையாடி 3919 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 42.13 ஆகும். இதில் 12 சதம், 18 அரைசதம் ஆகும்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் சேவாக்கிடம் ப்ரீத்தி ஜிந்தா மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. #IPL2018 #KXIP
    ஐபிஎல் 2018 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் அதிரடியால் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் உள்ள நான்கு போட்டியில் இரண்டில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடத்திற்குள் முன்னேறிவிடும்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 10 ஆட்டத்தில் கடந்த 8-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 1 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆனார். அதன்பின் கருண் நாயர், மனோஜ் திவாரி, நாத் போன்றோர் முன்னணி பேட்ஸ்மேன்கள் இருக்கையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் அஸ்வின் களம் இறக்கப்பட்டார். 2 பந்தை மட்டுமே சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.



    பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேஎல் ராகுல் 70 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    அஸ்வினை 3-வது இடத்தில் களம் இறக்க ஆலோசகரான சேவாக்குதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா போட்டி முடிந்த பிறகு சேவாக் உடன் வார்த்தை போரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆடும் லெவன் அணியில் தலையிட்டு தோல்விக்கு காரணமாக இருந்ததாக ப்ரீத்தி குற்றம்சாட்டியதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து சேவாக் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    ×