search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viral fever"

    • குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்பு
    • சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை, பனி மூட்டம் என சீதோஷ்ண நிலை மாறி, மாறி வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக காலை நேர பனி மூட்டம் பகல் 12 மணி வரை நீடித்து வருகிறது. இரவிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

    காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரம் இருக்கிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    ஏற்கெனவே, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வரும் நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து, மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகள், பயன்படுத்தி வீசப்பட்ட பொருட்களில் எங்காவது கொசுப்புழு வளர்கிறதா? என்பதை கண்டறிந்து அவற்றில் வளர்ந்துள்ள கொசுப்புழுக்களை அழித்து வருகின்றனர்.

    மேலும், தண்ணீர் தேங்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகை மருந்தும் அடித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது.

    இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் சார்பில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை அளித்தாலும் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    அதன் பிறகு அடுத்தகட்ட முகாம்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    • புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • 200 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

    அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 62, மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 594, காரைக்காலில் 74 பேர் என 730 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

    குழந்தைகள் நல பிரிவில் அரசு மருத்துவமனையில் 42, மகளிர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 145, காரைக்காலில் 13 பேர் என 200 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதவிர பெரியவர்கள் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    9 மாத பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ள நிலையில் சிறுமியின் சகோதரியும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் பலியாகி உள்ளனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் இல்லாவிட்டாலும் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஈரோடு கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி உள்பட பல பகுதிகளில் பலர் வி‌ஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுகாதாரதுறை சார்பிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 9 மாத பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு பலியாகி விட்டது.

    இந்த குழந்தையின் பெயர் நைனிகா. அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மாரிமுத்து - தமிழரசி ஆகிய தம்பதியினரின் மகள் ஆவாள்.

    கடந்த 4 நாட்களுக்கு முன் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தை நைனிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்படவே மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுதனர்.

    இந்த நிலையில் அந்த தம்பதியினருக்கு மீண்டும் ஒரு பேரிடியாக பலியான குழந்தை நைனிகாவின் அக்கா இந்துமதி (வயது 3)க்கும் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி இந்துமதியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அந்தியூர் ஒலகடம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு பெண் பலியானார். பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    மதுரை:

    மதுரை மற்றும் சுற்றப்புற மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.

    சிவகங்கை மாவட்டம், அரியக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா (வயது 50). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். காய்ச்சல் குணமாகவில்லை.

    இந்த நிலையில் சித்ரா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 128 பேர் வைரஸ் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பொது காய்ச்சல் வார்டு பிரிவில் உள்நோயாளியாக இருப்பவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்து இருக்கிறார்கள்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Denguefever
    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஏராளமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிலர் பலியாகி வருகின்றனர்.

    அலங்காநல்லூர் கம்மாபட்டியைச் சேர்ந்த வர் ராஜபாண்டி மகன் கணேஷ் பாண்டி (வயது8). உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12 மணிக்கு கணேஷ்பாண்டி பரிதாபமாக இறந்தான்.

    வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மகன் சரவணன் (39) தொழிலாளி. பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் நள்ளிரவு 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் கமுதியைச் சேர்ந்த மூக்கம்மாள் (57) வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்தும் பல னின்றி அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.

    இந்த நிலையில் மேலும் 116 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 98 பேர் வைரஸ் காய்ச்சலாலும், 15 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Denguefever
    ஆண்டிப்பட்டி அருகே 50 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது சித்தார்பட்டி கிராமம். இங்கு சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பருவ நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ராஜதாணி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மூட்டு வலி, கண் எரிச்சல் உள்ளிட்ட வைகளால் அவதியடைந்து வருகின்றனர். எனவே காய்ச்சல் பரவாமல் இருக்க சித்தார்பட்டியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்து காய்ச்சல் மேலும் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சித்தார்பட்டிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதனை குடிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே அதிகாரிகள் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×