search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velankanni"

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் மாதா ஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழை நாடுகளின் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

    கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்க கூடிய “பசிலிக்கா“ என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.

    துன்பத்தில் துவண்டு, அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி இந்த விழா நடைபெறுவதாக ஐதீகம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி, விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

    விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்த நாளான இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியளவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழ்கிறது. அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் ஆரோக்கியமாதாவை வழிபட்டு செல்வதால் வேளாங்கண்ணி, ஆன்மிக சுற்றுலா தலமாக திகழ்கிறது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது வேளாங்கண்ணி.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவிலில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.

    சிறிய தேர்பவனியும் நடைபெற்று வருகிறது. இதை காண இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆரோக்கியமாதாவை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகவும் வேளாங் கண்ணிக்கு வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கியமாதாவின் பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணி அளவில் நடைபெறு கிறது. பெரிய தேர்பவனி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேளாங்கண்ணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாளை 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 
    வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) பெரிய தேர்பவனி நடக்கிறது. இதனையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்
    நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி திகழ்கிறது.

    வேளாங்கண்ணி பேராலயத்தில், மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.

    தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெறும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விழா நாட்களில் தினந்தோறும் ஆலய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்படும். அதன்படி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

    வேளாங்கண்ணிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்த பக்தர்கள் தென்னங்கன்றுகளை ஆலயத்துக்கு கொண்டு வந்தபோது எடுத்த படம்.

    நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய திருத்தேர்பவனி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. இந்த தேர்பவனியை காண்பதற்காக சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா செரூபம் வைத்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துகொண்டு பாதையாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    நாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 
    வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற வாலிபர் ஹெட்போனில் பாட்டு கேட்டு சென்ற போது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    திருவாரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள குமாரிமலையை சேர்ந்தவர் தேவராஜ் மகன் மார்ட்டின் (வயது 24). பி.இ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி அவர் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். இதையொட்டி நேற்று வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக நண்பர்களுடன் புதுக்கோட்டையில் இருந்து நடந்து வந்தார். நீடாமங்கலம் -கொரடாச்சேரி இடையே உள்ள கிளரியம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் தனது செல்போனில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தஞ்சாவூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மார்ட்டின் உடல் துண்டாகி பலியானார்.

    இது தகவல் அறிந்த தஞ்சாவூர் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    திருவிழாவை முன்னிட்டு சென்னை, தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது.
    சென்னை:

    திருவிழாவை முன்னிட்டு சென்னை, தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு கீழ்க் கண்ட சிறப்பு கட்டண ரெயில் கள் இயக்கப்பட உள்ளது.

    வேளாங்கண்ணி-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்:06086) செப்டம்பர் 1, 5, 6-ந் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06087) வருகிற 28, 31-ந் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    சென்னை சென்டிரல்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06089) வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6-ந் தேதியும் சென்டிரலில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் சிறப்பு கட்டண ரெயில்(06090) வருகிற 31 மற்றும் செப்டம்பர் 7-ந் தேதியும் இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    நாகர்கோவில்- வேளாங் கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06093) செப்டம்பர் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில் சிறப்பு கட்டண ரெயில்(06094) செப்டம்பர் 3-ந் தேதி இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வேளாங்கண்ணியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகைமாலி, தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் பூவைமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கை கண்டித்தும், காப்பீடு தொகை வழங்காத கொளப்பாடு கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன அலுவலர் தினேஷ், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் விடுப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

    இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த முத்துபெருமாள், ஜீவானந்தம், வரதன் உள்பட விவசாயிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 
    ×