search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle test"

    கோவை மாவட்டம் சூலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் மதுக்கரை திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் செந்தில்குமார்(55). இவர் தமிழக போலீஸ் துறையில் 1988- ம் ஆண்டு பணியில் சேர்ந்து பல போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார்.

    தற்போது சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில் குமாரும், மற்றொரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தியும் சுல்தான் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென செந்தில்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக செந்தில்குமாரை சுல்தான் பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கரடிவாவி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார்.

    உயரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு காஞ்சனா(45) என்ற மனைவியும், ஹரிசந்தோஷ்(18) என்ற மகனும், சுபாசினி(26) என்ற மகளும் உள்ளனர்.
    பொன்னேரி, சோழவரம் பகுதியில் லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 253 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    சென்னை:

    பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 253 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews
    வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்போன் பதிவு சான்றிதழ்களை அசல் ஆவணங்களாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்போன் பதிவு சான்றிதழ்களை அசல் ஆவணங்களாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை எழுதிய கடிதத்தின் நகலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

    போக்குவரத்து போலீசார், மோட்டார் வாகன துறையினர் வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டுனர்களிடம் அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், புதிய வாகனங்களின் காப்பீடு, வாகன காப்பீடு புதுப்பித்தல் சான்றிதழ் போன்ற ஆவணங்களை கேட்பது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எண்ம பெட்டக முறையிலோ (டிஜி லாக்கர் முறை) அல்லது மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் முறையிலோ செல்போனில் பதிவு செய்யப்படும் நடைமுறை அமலில் உள்ளது.

    இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்கள் 2000-ம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப சட்டப்படி அசல் ஆவணங்களுக்கு இணையான ஆவணங்களாக கருதப்பட வேண்டும். ஆனால் இந்த ஆவணங்களை அசல் ஆவணங்களாக வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

    வாகன சோதனை மேற்கொள்ளும் போக்குவரத்து போலீசாரோ அல்லது மோட்டார் வாகன துறையினரோ, வாகன ஓட்டுனர்களிடம் மேற்கண்ட முறையில் செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அசல் ஆவணங்களுக்கு இணையாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #IDProof 
    ×