என் மலர்
நீங்கள் தேடியது "accepted"
தூத்துக்குடி தொகுதியில் திமுக எதிர்ப்பு தெரிவித்தால் நீண்ட நேர பரிசீலனைக்குப் பிறகு பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. #LokSabhaElection2019 #TamilisaiSoundararajan #TamilisaiNomination
தூத்துக்குடி:

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., பா.ஜனதா சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்பட 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அதன்பின்னர், வேட்பு மனு பரிசீலனை தொடங்கியபோதும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழிசையின் மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசீலனை செய்தனர். அதன்பின்னர் அவரது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார். #LokSabhaElection2019 #TamilisaiSoundararajan #TamilisaiNomination
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று அனைத்து தொகுதிகளிலும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., பா.ஜனதா சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்பட 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அப்போது தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனுவை பரிசீலனை செய்ய தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அவர் இயக்குனராக உள்ள விவரத்தை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலனை மதியம் 1.30 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்போன் பதிவு சான்றிதழ்களை அசல் ஆவணங்களாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை:

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை எழுதிய கடிதத்தின் நகலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
போக்குவரத்து போலீசார், மோட்டார் வாகன துறையினர் வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டுனர்களிடம் அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், புதிய வாகனங்களின் காப்பீடு, வாகன காப்பீடு புதுப்பித்தல் சான்றிதழ் போன்ற ஆவணங்களை கேட்பது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எண்ம பெட்டக முறையிலோ (டிஜி லாக்கர் முறை) அல்லது மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் முறையிலோ செல்போனில் பதிவு செய்யப்படும் நடைமுறை அமலில் உள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்கள் 2000-ம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப சட்டப்படி அசல் ஆவணங்களுக்கு இணையான ஆவணங்களாக கருதப்பட வேண்டும். ஆனால் இந்த ஆவணங்களை அசல் ஆவணங்களாக வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
வாகன சோதனை மேற்கொள்ளும் போக்குவரத்து போலீசாரோ அல்லது மோட்டார் வாகன துறையினரோ, வாகன ஓட்டுனர்களிடம் மேற்கண்ட முறையில் செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அசல் ஆவணங்களுக்கு இணையாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IDProof