search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck collision"

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நர்மதா இவர் வழூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் இசை செல்வன் என்ற குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சசிகுமார் நேற்று காலை வேலைக்கு சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் ஆரணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே லாரி சசிகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இதையடுத்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த போலீசார் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வ. உ. சி நகரை சேர்ந்தவர் சரவணன் என்பவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 17) டைல்ஸ் வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஆர்டிஓ அலுவலக சாலையில் இருந்து கெங்கை அம்மன் கோவில் பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது‌.இதில் லாரி டயருக்குள் விக்னேஷ் சிக்கினார்.அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆர்.டி.ஓ.அலுவலக ரோடு மற்றும் கெங்கை அம்மன் கோவில் இடையே சாலையை கடக்க சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • கடலை எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சேலம் கோவை புறவழிச்சாலையில் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • இரவில் லாரி நிற்பது தெரியாமல், எண்ணெய் லோடு லாரி கரும்பு லோடு லாரியின் மீது மோதியதில், லாரி ஓட்டுனர் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    மத்திய பிரதேச மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத்( வயது25). இவர் கடலை எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சேலம் கோவை புறவழிச்சாலையில் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரமாக எவ்வித சிக்னலும் போடாமல் கரும்பு லோடு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    இரவில் லாரி நிற்பது தெரியாமல், எண்ணெய் லோடு லாரி கரும்பு லோடு லாரியின் மீது மோதியதில், லாரி ஓட்டுனர் ஸ்ரீநாத் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். லாரி பலத்த சேதமடைந்த நிலையில் ஓட்டுனரை வெளியே எடுக்க முடியாததால், குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து போராடி ஓட்டுனரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கரும்பு லோடு லாரியில் தூங்கி கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சிருவன்கூர் பகுதியினை சேர்ந்த டிரைவர் செல்வம், (30)என்பவரும் காயமடைந்தார். இவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மயிலம் அருகே சாலை ஓர தடுப்புக்கட்டையில் லாரி மோதி டிரைவர் பலியானார்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினம் மாவட்டம் திருகுவளை பகுதியை சேர்ந்த குமரேசன்(26), என்பவர் ஓட்டி சென்றார். மயிலம் அருகே விளங்கம்பாடி அய்யனா ரப்பன் கோயில் எதிரே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த இரும்பு தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
    • குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனது மனைவி விஜயபாரதி வயது 26 , சசோந்த் (2 வயது குழந்தை) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சத்திரம் - குள்ளஞ்சாவடி சாலையில் அம்பலவாணன் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென்று முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 2 வயது குழந்தை மற்றும் தாய், தந்தை ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த மூன்று பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருத்தாசலம் அருகே கல்லூரி பஸ் மீது லாரி மோதியதில் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதுரை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பஸ் இன்று காலை மாணவர்களுடன் விருத்தாசலத்தில் இருந்து தொழுதூர் நோக்கி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாசலம் அடுத்த சாத்தியம் என்ற இடத்தில் அருகே நின்று கொண்டு மாணவர்களை பேருந்திற்குள் ஏற்றி கொண்டிருந்தபோது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது.

    இதில் பஸ்சில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டரை சிறைபிடித்து போராட்டம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த பெருமாள் குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிலர் லாரி மூலம் ஏரி மண் கடத்தல் நடக்கிறது.

    நேற்று இரவு அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கள்ளத்தனமாக ஏரி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது.

    இதில் பைக்கில் சென்ற பெருமாள் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (வயது 42) என்பவரின் கால்கள் முறிந்தது.விபத்தில் காயம் அடைந்த பூபாலனை பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வாகனத்தை மறித்து சிறை பிடித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி டி.எஸ்.பி பழனி பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதனால் 2 மணி நேரம் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    விபத்து குறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×