search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur accident"

    • கிடா விருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு வந்தபோது வேன் மோதி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வேனை ஓட்டி வந்த கருணாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி பொன்னுத்தாய் (55). இவர்களது தோட்டத்தில் வருகிற 12-ந் தேதி கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக உறவினர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இந்தநிலையில் ஆத்துக்கிணத்துப்பட்டியில் உள்ள உறவினரை அழைக்க தம்பதி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் உறவினரை சந்தித்து அழைப்பு விடுத்து விட்டு லிங்கமநாயக்கன்புதூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    சுங்காரமடக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். பொதுமக்கள் தம்பதியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தம்பதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வேனை ஓட்டி வந்த கருணாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிடா விருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு வந்தபோது வேன் மோதி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூரில் கணவன் கண் முன்னே அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் அடுத்த நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மனைவி ராம்சீனா(24). சம்பவத்தன்று மாலை கணவன்-மனைவி இருவரும் மேட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி சென்று கொணடிருந்தனர்.

    காங்கேயம் ரோடு புதுப்பாளையம் அருகே சென்ற போது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ராம்சீனா பஸ்சில் சிக்கி கொண்டார். அமானுல்லா அதிர்ஷ்டவசமாக தப்பினார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ராம்சீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் சக்திகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் அடுத்த முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 53). தொழிலாளி. இவர் நேற்று காங்கயம்- முத்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பேபி (45) என்ற பெண்ணுடன் தாராபுரம் ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் பேபியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பேபியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரவியை குமார்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரான திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை (52) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    ×