search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi collector"

    தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு சேர்வதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    அனைத்து மாணவ- மாணவிகளுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படுகிறது. வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படுகிறது.

    3 ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

    கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.எனவே கலை ஆர்வமுள்ள மாணவ- மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை மாவட்ட அரசு இசைப்பள்ளி, குரூஸ் புரம் சமுதாய நலக்கட்டிடம், தூத்துக்குடி என்ற முகவரியிலும் தொலைபேசி எண் 0461 - 2300605 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீதம் மானியத்தில் மின்சாரத்தில் இயங்கும் புல்வெட்டும் கருவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய கால்நடை குழுமத்தின் 2017-18ம் ஆண்டு திட்டப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீதம் மானியத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரத்தில் இயங்கும் புல்வெட்டும் கருவி வழங்கப்பட உள்ளது.

    இந்த கருவியை பெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் 2 கால்நடைகள் வளர்ப்போர்கள், 0.5 ஏக்கர் புல்வளர்ப்புக்கு இடம் மற்றும் புல்வெட்டும் கருவிக்கு 25 சதவீதம் தொகையை செலுத்த விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    மேலும், சுயஉதவிக்குழு உறுப்பினர் ஒரு கால்நடை வளர்ப்போராகவும், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு முன்பு இதுபோன்ற சலுகைகளை அரசிடம் இருந்து பெற்றவராக இருக்கக்கூடாது.

    மேற்கண்ட தகுதியுடைய, புல்வெட்டும் கருவி தேவைப்படும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதி கால்நடை மருந்தகத்தில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் அகற்றும் பணி நேற்று தொடங்கியதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். #sterliteplant
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்திய தமிழக அரசின் உயர்மட்டக்குழு ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் கந்தகஅமிலம், பாஸ்பாரிக் அமிலம், எரிவாயு(எல்.பி.ஜி.), டீசல், தாமிர தாது, ஜிப்சம், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உள்ளிட்ட ரசாயனங்கள் உள்ளன.

    இந்த ரசாயனங்களை அகற்றுவதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உதவி கலெக்டர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் லிவிங்ஸ்டன் மற்றும் தீயணைப்பு துறை, தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர், மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளனர்.

    இந்த குழுவினர் ஆலைக்கு சென்று ரசாயனங்களை அகற்றுவதற்கு தேவையான பம்பு, டேங்கர் லாரிகள் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து இன்று (அதாவது நேற்று) ரசாயனங்களை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த பணிக்கு டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த 30 நாட்களில் இந்த பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஜிப்சம் மட்டும் அதிக அளவில் இருப்பதால் கூடுதல் நாட்கள் ஆகலாம்.

    இங்கிருந்து வெளியேற்றப்படும் ரசாயனங்கள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மூலம் அவர்களிடம் இருந்து ஏற்கனவே பொருட்களை வாங்கும் நிறுவனத்துக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கான செலவுகளை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.



    மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த கலவரத்தில் மொத்தம் 118 பேர் காயம் அடைந்தனர். 43 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. லேசான காயம் அடைந்தவர்களில் 52 பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது.

    துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்த 13 பேரின் உறவினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளோம். எந்தெந்த துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளது என்ற விவரங்களும் தெரிவித்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக கந்தக அமிலம் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. 6 டேங்கர் லாரிகள் மூலம் 120 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முழுவீச்சில் ரசாயனங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. #sterliteplant
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகாயம் அடைந்த 14 பேரின் நிலை கவலைகிடமாக இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.#bansterlite #sterliteprotest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய கலெக்டராக பதவி எற்ற சந்தீப் நந்தூரி கவலரம் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தின் போது 102 பேர் காயமடைந்தனர்.

    இவர்களில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 14 பேர் உள்பட 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீஸ் தரப்பில் 10 பெண்கள் உள்ளிட்ட 34 பேர் காயமடைந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நிலவி வரும் பதட்டமான சூழலில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவது தொடர்பாக வர்த்தகர்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பபெற வேண்டும், போலீசார் வீடு வீடாக ரோந்து செல்வதை நிறுத்த வேண்டும், நிறுத்தப்பட்ட இணையதள சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எங்களிடம் வைத்துள்ளனர்.



    அதுதொடர்பாக பரிசீலித்து வருகிறோம். மேலும் பொதுமக்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் மருத்துவமனையில் நோயாளிகளுடன் உள்ளவர்களுக்கு உணவு, பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிப்படியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசின் முடிவும் அதுவே என முதல்வர் அறிவித்து உள்ளார்.

    அதன்படி முதல்கட்டமாக ஆலைக்கு செல்லும் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் வழங்கப்படும் உரிமம் புதுப்பித்தல் சான்று இதுவரை வழங்கப்படவில்லை. அந்த சான்று இருந்தால்தான் ஸ்டெர்லைட் ஆலை செயல் பட முடியும்.

    ஆலை விரிவாக்கத்துக்கு தமிழக அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை. இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இயல்புநிலை திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் டேவிதார், வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூறியதாவது:-

    போராட்டத்தின் போது 19 அரசு வாகனங்கள் உள்பட 24 கார் போன்ற வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. 74 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.



    இதன் சேதமதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுதவிர 35 கார்கள் ஓரளவு சேதமாகி உள்ளது. இதில் 19 கார்கள் அரசுக்கு சொந்தமானவை. 13 இருசக்கர வாகனங்கள் பாதியளவு சேதமடைந்துள்ளன. இதன் சேத மதிப்பு ரூ.36 லட்சம் ஆகும்.

    கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.#bansterlite #sterliteprotest
    ஸ்டெர்லைட் ஆலையை முடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்துள்ளார். #ThoothukudiShooting #ThoothukudiCollector
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டு, அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி நகர பகுதியில் பேருந்துகளை தவிர்த்து மற்ற வாகனங்கள் இன்று இயங்க தொடங்கின. நகரில் ஆங்காங்கே மருத்துக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று வணிகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நகரில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், வழக்கம்போல் வணிக நிறுவனங்களை திறக்க வேண்டு என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

    பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 102 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் 34 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    இருசக்கர வாகனம் உட்பட மொத்தம் 98 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. 

    ஸ்டெர்லைட் ஆலை நிச்சயமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை மீண்டும் செயல்படவாய்ப்பு இல்லை. அதுதான் அரசின் எண்ணம். 

    தூத்துக்குடியில் அம்மா உணவகம் 24 மணி நேரமும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை திறந்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே பேருந்துகள் இயங்கத் தொடங்கிவிட்டன. நகரத்துக்கு உள்ளும் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இயல்பு நிலை திரும்ப பொதுமமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.  #ThoothukudiShooting #ThoothukudiCollector
    ×