search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvalluvar statue"

    • திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படும்.
    • பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பணி நிறைவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் அம்சங்கள் ஆகும்.

    திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படும். எனவே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அதன் மேல் ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் ஆரம்பமானது.

    முதல்கட்டமாக சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 80 டன் இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. சிலையை சுற்றிலும் காகித கூழ் ஒட்டும் பணி நடைபெற்றது. இவ்வாறு ஒட்டப்படும் காகித கூழ் மூலம் சிலையில் படிந்திருக்கும் உப்புத்தன்மை முழுவதுமாக நீக்கப்படும். பின்னர் காகித கூழ் அகற்றப்பட்டு சிலை சுத்தம் செய்யப்படும். தற்போது காகித கூழ் ஒட்டும் பணி 80 சதவீத அளவு நிறைவடைந்து உள்ளது. அடுத்த கட்டமாக காகிதகூழ் அகற்றப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை மூலம் சிலை முழுவதுமாக பூசப்படும்.

    இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 5-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இடையிடையே பெய்த மழை காரணமாகவும் காற்றின் வேகம் காரணமாகவும் பணிகள் தடைபட்டன.

    தற்போது 65 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பணி நிறைவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஐந்தரை அடி உயரம், 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலை விஐிபி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆங்கிலேயர்கள் இந்தியாவை கலாசார இல்லாத நாடாக, ஒரு பொருளாக, சந்தையாக காட்ட முயன்றனர்.

    டெல்லி தமிழ் கல்விக் கழக மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். ஐந்தரை அடி உயரம், 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலை விஐிபி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த பிறகு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

    திருக்குறளில் பக்தி ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டது.

    ஆதி பகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர். பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பைவிடுத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கலாசார இல்லாத நாடாக, ஒரு பொருளாக, சந்தையாக காட்ட முயன்றனர்.

    இந்தியா, கலாசாரம் நிறைந்த பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
    • முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெறஉள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

    இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.

    தற்போதுரூ.1கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 5மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.இந்தநிலையில் இந்த பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெறஉள்ளது. இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்த 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரி வந்து உள்ளது.

    இவை படகுகள் மூலம் சிலை அமைந்துஉள்ள பாறைக்கு படகுமூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையை சுற்றி ரசாயன கலவை பூசுவதற்காக இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது முதல் கட்டமாக திருவள்ளுவர் சிலையின் பீடத்தைச் சுற்றி இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 40 அடி உயரத்துக்கு திருவள்ளுவர் சிலை பீடத்தின் வெளிப்புறத்தை சுற்றி சாரம் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது.

    தற்போது திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் இருந்து கொண்டை பகுதி வரை சாரம் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • திருவள்ளுவர் சிலைக்கு 4 ஆண்டுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது.
    • சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. கடந்த 2000 -ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இந்தச் சிலையை திறந்து வைத்தார். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று இந்தச் சிலையை கண்டுகளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    3 ஆண்டுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக, கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டது.

    சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டு பின்னர் காகிதக் கூழ் கொண்டு சிலையில் படிந்துள்ள உப்புக்கரிசல் நீக்கப்படுகிறது. அதன்பின், ஜெர்மன் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசப்படுகிறது.

    இந்நிலையில், இந்த பணியால் இன்று முதல் வரும் நவம்பர் 2-ம் தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    கன்னியாகுமரி:

    தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை பெய்யுமென்றும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் இருந்து தினமும் அதிகாலையில் ஏராளமான மீனவர்கள் கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். ஆனால் இன்று காலை இவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

    கடலுக்கு புறப்பட்ட சிலரும் அலைகளின் ஆக்ரோ‌ஷம், கடல் சீற்றம் காரணமாக கரைக்கு திரும்பினர். மேலும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரியில் நேற்றிலிருந்தே கடல் சீற்றம் காணப்பட்டது. அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்தன. இன்று காலையிலும் அலைகள் ஆக்ரோ‌ஷமாக மிரட்டின. இதனால் காலையில் சூரியோதயம் காணச் சென்ற சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.



    கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. கோவளத்தில் தூண்டில் வளைவு சேதமானது.
    ×