search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirupparankundram"

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எதிரிகளுடன் சேர்த்து உதிரியையும் வெல்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #ADMK #TNMinister #Udhayakumar
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளத்தில் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    சென்னை ஆர்.கே. நகரில் நாங்கள் அசந்ததினால் தினகரன் வெற்றி பெற்று வாய் சவடால் பேசிக் கொண்டிருக்கிறார். புலியை பார்த்து பூனை சூடு போட்டக் கதையாக அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா நடத்தியதைபோல், நீங்களும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கொண்டாடினீர்கள், ஏன் அதன் பின் கொண்டாடவில்லை.

    ஆர்.கே. நகர் தொகுதி வேறு, திருப்பரங்குன்றம் வேறு. அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறீர்கள். உங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மாக்கள் மன்னிக்காது.

    அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள், அழிந்து போனது தான் வரலாறு. அ.தி.மு.க. சவுக்கு மரம் போல் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் வளைந்தாலும் நெட் லிங்க மரம் போன்று உயர்ந்து நிற்கும் எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது. தொட்டுப் பார்க்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எதிரியோடு உதிரியையும் வெல்வோம் .

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #Udhayakumar
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
    திருப்போரூர்:

    திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று காலை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழா நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.

    திருச்சி முக்கொம்பு அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நன்றாக இருந்தது. அணை உடைந்தது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் சென்றுள்ளார். அவர் ஆய்வு செய்து விளக்கம் அளிப்பார்.

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வை வலுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கோவிலில் இருந்து காரில் புறப்பட்டார். கண்ணகப்பட்டு சென்றபோது கட்சி பிரமுகர் ஒருவரது டீக்கடைக்கு சென்றார். அங்கு அமர்ந்து டீ குடித்தார். அப்போது டீ நன்றாக உள்ளதாக பாராட்டினார்.

    உடன் எம்.பி.க்கள் மைத்ரேயன், மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

    முன்னதாக திருப்போரூர் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணகப்பட்டு மற்றும் கோவில் குளம் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #ADMK #OPanneerSelvam
    ×