search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager was killed"

    • பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபம்
    • ஆரணியை சேர்ந்தவர்

    ராணிப்பேட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி தாலுகா, ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன், இவரது மகன் ரகுராஜ் (வயது 25).

    இவர் நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அைணக்கட்டு சாலை மேம்பாலம் பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.

    இதில் ரகுராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ரகுராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேம்பால பணிகள் நடந்து வருகிறது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில்வே மேம்பால பணியின் பில்லர் அமைக்க வெட்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் பில்லர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்த வாலிபரை கயிறு கட்டி வெளியே எடுத்தனர் அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டிலிருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு செல்லவும், இதனால் தனது மோட்டார் சைக்கிளை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு ரெயில் மூலம் திருப்பதி செல்ல இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் நடைபெற்று வரும் வழியில் ரெயில்வே மேம்பாலப் பணிக்கு பில்லர் அமைப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து வினோத் குமாரின் தந்தை ஜெயராமன் என்பவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் உக்கம் சந்த். ஆற்காடு அடுத்த காவ னூரில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகன் பியூஸ் (வயது 22). இவர் தனது தந்தைக்கு துணையாக கடையில் இருந்து வந்துள் ளார். இந்த நிலையில் நேற்று மதியம் பியூஸ் காவனூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு பைக்கில் சென்றார்.

    ஆற்காடு அண்ணா சாலை யில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் பியூஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழேவிழுந்த அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநிலத்தை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    ராஜஸ்தான் மாநிலம் தோலாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீர்பால்கட்போ (35).

    இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வேலூருக்கு வந்தார். காட்பாடி தாராபடவேட்டில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்தார்.

    இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை மாடி படியில் ஏறிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

    இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திடீரென அமைத்த வேகத்தடையால் விபரீதம்
    • பொதுமக்கள் சாலை மறியல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் லக்கி நாயக்கன்பட்டி அருகே பாலம் வேலை நடைபெறுகிறது. இதனால் அந்த இடத்தில் நேற்று இரவு திடீெரன வேகத்தடை அமைத்தனர். இதையறியாத வாகன ஓட்டிகள் வேகத்தடையில் விபத்தில் சிக்கினர்.

    காக்கங்கரை அருகே மேற்கு பதனவாடி என்ற ஊரைச் சேர்ந்த சூர்யா (வயது 22). லாரி டிரைவர். இரவு 9 மணிக்கு மேற்கு பதனவாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    லக்கி நாயக்கன்பட்டியில் வேகத்தடைய கவனிக்காமல் சென்ற சூர்யா தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனை அறிந்த அவரது தாய் சிவகாமி விபத்து நடந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரும் தடுப்பில் மோதி காயம் அடைந்தார்.

    போலீசார் சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயமடைந்த சிவகாமி சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    இதனையடுத்து திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது விபரீதம்
    • மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்பாண்டியன் (வயது 24) கூலி வேலை செய்து வந்தார்.

    இன்று காலையில் பரத்பாண்டியன் தனது வீட்டு அருகே உள்ள நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் பரத்பாண்டியன் மின்கம்பியை மிதித்தார்.

    அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால் அவரது பெற்றோர் நிலத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பரத்பாண்டியன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும் மின்வாரி யத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் டவுன் போலீசார் பரத் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்கம்பி அறுந்து விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

    • பைக்கில் இருந்து விழுந்தவர் மீது கார் மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன்பே ட்டையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 34).

    இவர் நேற்று பள்ளிகொண்டா நோக்கி பைக்கில் சென்றார். அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏறிய போது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் அவரது பின்னால் வந்த கார் பாலாஜி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தார் .

    விரிஞ்சிபுரம் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காளை விடும் விழாவில் ேசாகம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் பாகாயம் அடுத்த மேட்டுஇடையம் பட்டியில் நடந்த மாடு விடும் விழாவை காண ஏழுமலை சென்றிருந்தார்.

    அப்போது ஒரு காளை திடீரென ஏழுமலையை முட்டியது. இதில் மார்பு, கழுத்துப்பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே எதிரேயுள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

    இது சம்பந்தமாக அப்பகுதி பொது மக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலா ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக வரும் போது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்திருக்க லாம் என போலீசார் சந்தேகி க்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் போர்டிங் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சோளிங்கர் பஜாரில் எண்ணெய் செக்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜெயபாரதி என்ற மகளும், மோகித் என்ற மகனும் உள்ளனர்.

    ஜெயபாரதி அங்குள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மோகித் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல சுரேஷ் இன்று காலை பஜாரில் உள்ள எண்ணெய் செக்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக செக்கில் கை சிக்கியது அவர் சுதாரிப்பதற்குள் அவரை முழுவதுமாக செக் இழுத்துக் கொண்டது. இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பனைமரத்தில் ஏறி நுங்கு பறிக்க முயன்ற போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி-நேதாஜிநகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 28), கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண் பர்கள் நவீன்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் கோவிந்தபுரம் ஏரி பகு தியில் சென்று ஏரியில் மீன் பிடித்தனர். பின்னர் ஏரி பகுதியில் உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக அருகில் உள்ள மூங்கில் குச்சி எடுத்து நுங்குகளை பறிக்க பலராமன் முயன்றார். அப்போது அங்கு சென்று கொண்டி ருந்த உயர் மின்சார கம்பி மீது மூங்கில் குச்சி உரசியதால் மின்சாரம் தாக்கி பலராமன் தூக்கி வீசப் பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த பலராமனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த ஆசனம்பட்டு ரோடு நியூ பெத்தலேகியம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 29) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது பைக்கில் ஆம்பூர் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    இப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ஸ்ரீராம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×