search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager arrested for"

    • கஞ்சா விற்பனை செய்த பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.
    • இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது மொசல் மடுவு அருகே பள்ளத்தின் வழியாக ஒரு வாலிபர் சாக்கு பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். சந்தே கம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 4½ கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்தினர். இதில் அவர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்த ஆண்டி சாமியின் மகன் பிரகாஷ் (வயது 27) என தெரிய வந்தது.

    மேலும் பிரகாசின் தந்தை ஆண்டிசாமி சம்பவத்தன்று மொசல்மடுவு பகுதியில் தனது வீட்டின் பன்புறம் உள்ள புறம்போக்கு நில த்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதும், கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்கள் வைத்திருந்ததையும் போலீ சார் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து போலீசார் ஏற்கனவே ஆண்டிசாமியை கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறையில் உள்ள ஆண்டி சாமியை ஜாமீனில் எடுப்ப தற்கு பணம் இல்லாததால் ஆண்டிசாமி மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.

    அதன்படி அவரது தந்தை மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து கொண்டு விற்பனை செய்ய சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    • ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.
    • அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி புது பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.

    இது குறித்து ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன் என்பவர் பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அர்பாத் நகர் பகுதியைச் சேர்ந்த தியாகத் அலி என்பவரது மகன் நியாஷ் அகமது (20) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவது போல் நடித்து தொடர் செல்போன் திரு ட்டில் ஈடுப ட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×