search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதான வாலிபர்"

    • வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கினார்.
    • போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் கோபி சாலை ஒண்டி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த வர் சகுந்தலா (65). இவர் வீட்டு அருகே தேங்காய் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் சகுந்தலா கடைக்கு வந்தார். இதை யடுத்து அன்று இரவு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த அந்த வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி சகுந்தலாவை தாக்கினார்.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

    இதில் அவர் விழுப்புரம் மாவட்டம் கானைகோனூர் புதுக்காலனியை சேர்ந்த கிறிஸ்தாஸ் (25) என்பதும், குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர் சகுந்தலாவை தாக்கி செல்போனை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து செல்போனை கைப்பற்றிய பங்களாப்புதூர் போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஆபாசமாக இருப்பது போன்ற படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டல்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்

    கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பெண்ணை விக்னேஷ் தனது வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததா கவும், அந்த பெண் மயக்கமாக இருந்த போது அவருடன் ஆபாச மாக இருப்பது போன்ற படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி யதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அப்போது விக்னேஷ் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இதற்கிடையே அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவருக்கும் விக்னேஷ் ஆபாச படங்களை அனுப்பி யதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். இதையடுத்து அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்த பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.
    • இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது மொசல் மடுவு அருகே பள்ளத்தின் வழியாக ஒரு வாலிபர் சாக்கு பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். சந்தே கம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 4½ கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்தினர். இதில் அவர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்த ஆண்டி சாமியின் மகன் பிரகாஷ் (வயது 27) என தெரிய வந்தது.

    மேலும் பிரகாசின் தந்தை ஆண்டிசாமி சம்பவத்தன்று மொசல்மடுவு பகுதியில் தனது வீட்டின் பன்புறம் உள்ள புறம்போக்கு நில த்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதும், கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்கள் வைத்திருந்ததையும் போலீ சார் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து போலீசார் ஏற்கனவே ஆண்டிசாமியை கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறையில் உள்ள ஆண்டி சாமியை ஜாமீனில் எடுப்ப தற்கு பணம் இல்லாததால் ஆண்டிசாமி மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.

    அதன்படி அவரது தந்தை மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து கொண்டு விற்பனை செய்ய சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    • சிறுமியின் வீட்டிற்கு இளங்கோவன் வந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி யின் 16 வயது மகள் 8-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த இளங்கோ வன் (22). கூலி தொழிலாளி. இவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் பழகி வந்ததை சிறுமியின் தாயார் கண்டித்தார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் தாயார் வேலைக்கு சென்று விட்டார். அப்போது சிறுமி யின் வீட்டிற்கு இளங் கோவன் வந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15-ந்தேதி இளங்கோவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இளங்கோவன் டி.ஜி. புதூர் பகுதியில் வாடகை வீட்டில் அந்த சிறுமியுடன் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் நேற்று அந்த சிறுமி மயக்கம் அடைந்தார். இதனால் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த தகவல் சிறுமியின் தாயிக்கு கிடைத்தது. இதையடுத்து சிறுமியின் தாய் ஆஸ்பத்தி ரிக்கு சென்று பார்த்த போது சிறுமி கர்ப்பமாக இருநதது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் பங்களாப் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளங்கோவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடை த்தனர்.

    • போலீசார் காளிங்கராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
    • அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    அந்தியூர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய ஒரு சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் அந்த சிறுமியிடம் விசாரி த்தார். அப்போது அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழி லாளியான ராஜா (36). என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.

    இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ன ம்மாள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். மேலும் அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கட்டிட கூலி தொழிலாளி ராஜா பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீ சார் காளிங்க ராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்பு கொண்டார். மேலும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    • போலீசார் விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஆசிப்முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.
    • இதனை அடுத்து அவர் மீது உபா சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த மாதம் 26-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆசிப் முசாப்தீன் (27) என்ற வாலிபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து செல்போன்கள், டைரிகள், சிம்கார்டுகள், லேப்டாப்புகள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றினார்.

    போலீஸ் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஆசிப்முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

    இதனை அடுத்து அவர் மீது உபா சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கைதான ஆசிப் முசாப்தீன் மீதான வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு நேற்று முன்தினம் வந்தது.

    இதற்காக கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து முசாப்தீன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    விசாரணையின் போது முசாப்தீனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மாலதி 2 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஆசிப் முசாப்தீனை போலீசார் ரகசிய இடத்தில் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அவருக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது.

    அவருக்கு யாரெல்லாம் உதவி செய்தனர். தமிழகத்தில் வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? போன்ற கேள்விகளை முசாப்தீ னுவிடம் அடுக்கடுக்காக கேட்டனர். விடிய, விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் உடன் இருந்தனர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடந்தது. இன்று மாலையுடன் போலீஸ் காவல் முடிவடைய உள்ளதால் போலீசார் முசாப்தினை இன்று மாலை மீண்டும் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.

    ×