search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா ரெயில் விபத்து"

    • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
    • சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காது

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விசாரணை முடிந்து உண்மையை கண்டறியும் வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காதவாறு சமிக்ஞை கட்டுப்பாடு மூடப்பட்டு விட்டது.

    பஹனாகா பஜார் ரெயில் நிலையம் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் ரிலே இண்டர்லாக்கிங் பேனல்களில் ஒளிரூட்டப்பட்ட சிக்னல் குறியீடுகள், பாயிண்டுகள், ட்ராக் சர்க்யூட்ஸ், க்ராங்க் ஹேண்டில்கள், எல். சி.கேட், சைடிங்க்ஸ் இத்யாதிகள் அவற்றின் புவியியல் நிலைக்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தை சீலிட்டு பதிவுப் புத்தகத்தையும் சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளதால் இங்கு ரெயில்கள் நிற்காது என தென்கிழக்கு ரெயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறியுள்ளார்.

    சி.பி.ஐ. அமைப்பினர், ரிலே இண்டர்லாக்கிங் பேனல் அமைப்பிற்கு சீல் வைத்துவிட்டனர். இது ரெயில் சமிக்ஞை கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். இதை தடை செய்ததால் பயணிகள் ரெயிலோ, சரக்கு ரெயிலோ இங்கு நிற்காது எனவும் தெரிவித்தார்.

    விபத்து நடந்த இடத்தில் அனைத்து இருப்பு பாதைகளும் சரி செய்யப்பட்டிருந்தாலும், சில கோளாறுகள் சரிசெய்ய வேண்டி உள்ளதால் சுமார் 24 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 2-ந்தேதி நடந்த ஒடிசாவில் ரெயில் விபத்தில் 288 பேர் பலியாகினர்.
    • ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.

    புவனேசுவரம் :

    ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அடையாளம் காண முடியாமல் சிதைந்து போன உடல்கள், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இந்த நிலையில், அங்கு விட்டுச்செல்லப்பட்டுள்ள யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயிலின் பெட்டியில் இருந்து பிண வாடை வீசுவதாகவும், இன்னும் அதனுள் உடல்கள் கிடப்பதாகவும் சம்பவம் நடந்த பாகாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றிய புகார் எழுந்து, ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.

    அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறும்போது, "அந்த ரெயில் பெட்டியில் மனித உடல்கள் இல்லை. அழுகிய முட்டைகளைத்தான் பார்த்தோம். அந்த ரெயிலில் பார்சல் பெட்டியில் 3 டன் முட்டைகள் எடுத்து வரப்பட்டன. எல்லா முட்டைகளும் அழுகிப்போய் விட்டன.

    அந்த நாற்றம்தான் வந்துள்ளது. அந்த முட்டைகளை 3 டிராக்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டோம்" என குறிப்பிட்டார்.

    • ஒடிசாவின் பாலசோரில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
    • விபத்தில் சிக்கியிருந்த உடல்கள் பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டன.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்புப் படையினர் அகற்றியதும், அந்த உடல்கள் விசாரணைக்காக பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளியின் 3 அறைகளில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பள்ளி அறை ஒன்றிலேயே பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் 2 நாட்கள் அங்கேயே இருந்தன. பிறகுதான் அவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பல உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது அந்தப் பள்ளியில் சிறப்பு பரிகார பூஜை கள் நடந்து வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட உடல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அறை களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புனித குளங்களில் இருந்து நீர் எடுத்து வந்து தெளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வரும் 16-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் அவர்களது கெட்ட ஆவி சுற்றுமோ என்று பயப்படுகிறார்கள். இது மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. பெரும்பாலான பெற்றோர்கள் கூறுகையில், ரெயில் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் கொண்ட கட்டிடத்தையே இடித்து விடலாம் என தெரிவித்தனர். பள்ளி நிர்வாகக் குழுவும் அதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானம் பாலசோர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் உயரதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் வழங்கினர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கின. முதல் கட்டமாக மேற்கூரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தர்வர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
    • மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடக்கம்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

    மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானார்ஜி செல்கிறார். ஹெலிகாப்டரில் புறப்பட்ட மம்தா சம்பட இடத்தில் நிலைமையை பார்வையிட உள்ளார்.பின்னர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தர்வர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது.
    • விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

    கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது. அதோடு பயணிகள் எழுப்பிய கூக்குரலம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது.

    இதனை கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஓடிவந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாலசோர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்க இடம் கொடுத்ததோடு, அவர்களுக்கு உணவும் வழங்கினர். குழந்தைகளுடன் வந்த பயணிகள் பாலசோர் பகுதி மக்களின் அன்பில் நெகிழ்ந்தனர்.

    ×