search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானைகள்"

    • காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் வந்து நின்றன.
    • வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டை விட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி வருகின்றன.

    அவ்வாறு வெளியேறும் யானை கூட்டம் அடிக்கடி வனப்பகுதி ரோட்டில் வந்து இருக்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி என்ற இடத்தில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் வந்து நின்றன. அந்த யானைகள் ரோட்டில் அங்கும் இங்குமாக உலா வந்தன.

    ரோட்டில் யானை கூட்டம் இருப்பதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டனர். சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர்.

    சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு யானை கூட்டம் ரோட்டை கடந்து மீண்டும் வனபகுதிக்குள் சென்றன. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து செல்ல தொடங்கியது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை கூட்டம் அடிக்கடி இங்கு வந்து சாலையை கடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் வாகனங்களில் இருந்து இறங்கி யானைகள் கூட்டம் அருகே சென்று செல்பி எடுக்கக்கூடாது.

    அதை மீறி எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    • பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது
    • யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும்

    கூடலூர்

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் உள்ள கெவிப்பாரா என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. தொடர்ந்து சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது.

    மேலும் பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கோக்கால் மலையடிவாரம், கெவிப்பாரா, தருமகிரி, காமராஜ் நகர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இரவில் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஓவேலி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கூடலூர்-ஓவேலி சாலையில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக கூடலூருக்கு வந்து செல்கின்றனர். தற்போது காட்டு யானைகள் கூட்டமாக கெவிப்பாரா பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    இதேபோல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகில் பொன்னப்பல்லியில் நேற்று காலை 2 குட்டிகளுடன் 5 யானைகள் உலா வருகின்றன. அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வாழை தோப்புக்குள் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்துள்ளது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் கேழ்வரகு, காய் கறி செடிகள் பூச்செடிகளை சேதப்படுத்தி உள்ளது.

    இதனால் விவசாயிகள் மன வேதனைக்கு உள்ளாகினர். இச்சம்பவம் அறிந்து வந்த ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதி விவசாயிகள் காட்டு யானைகளை விரட்ட கோரி வலியுறுத்தினர்.

    • யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது.
    • இதனால் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள அண்ணா நகர், இரட்டை சாலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை வீட்டு இரண்டு காட்டு யானைகள் வெளியேறி பவானிசாகர் சாலைக்கு வந்தது. பின்னர் குப்பை கிடங்கு பகுதிக்கு வந்த யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது.

    இதை கண்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் யானைகளை பட்டாசு வெடித்து வன பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழிகள் ஆழமாக இல்லாமல் மண் மூடி கிடக்கிறது. இதன் காரணமாக யானைகள் ஊருக்குள் சுலபமாக புகுந்து விடுகின்றன.

    பயிர்களையும் சேதம் செய்து வருகிறது. எனவே மீண்டும் அகழி வெட்ட வேண்டும். மேலும் அடர்ந்த வனப் பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.
    • யானைகள் கூட்டத்தை பார்த்ததும் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு 3-வது வழிப்பாதையாக வெள்ளியங்காடு-மஞ்சூர் பாதை உள்ளது.

    இந்த பாதை வழியாக மஞ்சூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர நீலகிரிக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் இந்த சாலையிலும் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி சாலைகளில் காட்டு யானை, காட்டு பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    பஸ் வெள்ளியங்காடு அருகே வந்தபோது, வனத்தைவிட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் நடுரோட்டிற்கு வந்தன. அங்கு வந்ததும், அரசு பஸ்சை காட்டு யானைகள் கூட்டம் மறித்தது.

    யானைகள் கூட்டத்தை பார்த்ததும் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார். மேலும் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். ஆனால் யானை அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். பஸ் டிரைவரும், பயணிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினர். அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

    இதையடுத்து பஸ் டிரைவரும், பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன் பின்னர் பஸ்சை பஸ் டிரைவர் வேகமாக இயக்கி சென்றார். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்ததால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி;

    நீலகிரி பந்தலூர், பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 பாலவாடி குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். நேற்று அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்தது.

    இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒரு யானை மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சைகொல்லி செல்லும் சாலையில் சென்றது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • வாகன ஓட்டுநர்கள் வனப்பகுதி சாலையோரம் கரும்பு துண்டுகளை யானைகளுக்கு உணவாக போட்டுவிட்டு செல்கின்றனர்.
    • சாலையோரத்தில் கூட்டமாக காட்டு யானைகள் நிற்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரியில் பாரம் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    லாரியில் கரும்பு பாரம் ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநர்கள் ஆசனூர் மற்றும் புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக சாலையில் செல்லும்போது கட்டுக்கட்டாக கரும்பு துண்டுகளை சாலையோரம் யானைகளுக்கு உணவாக போட்டுவிட்டு செல்கின்றனர்.

    கரும்பின் வாசனையை நுகர்ந்து காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி கூட்டம் கூட்டமாக சாலையோரம் முகாமிட்டபடி கரும்பு துண்டுகள் ருசித்து வருகின்றன. சாலையோரத்தில் கூட்டமாக காட்டு யானைகள் நிற்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

    இன்னும் சில வாகன ஓட்டிகள் வாகனங்கள் விட்டு இறங்கி ஆபத்தை உணராமல் யானைகளை தங்களது செல்போனில் படம் பிடிக்கின்றனர். எனவே கரும்பு லாரியை இயக்கும் ஓட்டுநர்கள் லாரியில் இருந்து கரும்பு துண்டுகளை வனப்பகுதியில் உள்ள சாலையோரம் காட்டு யானைகளுக்கு உணவாக அளிக்க கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதையும் மீறி கரும்பு கட்டுகள் யானைகளுக்கு வீசும் வாகன ஓட்டுநர்கள் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

    ×