search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suresh Gopi"

    சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் என்று நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி கூறினார். #Sabarimala #SureshGopi
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

    பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு மின் கோபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த ஆன்மீக பூமியில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

    சபரிமலை வி‌ஷயத்தில் கோர்ட்டு சரியான முடிவை அறிவிக்கவில்லை. வருகிற 22-ந்தேதி மேல்முறையீடு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறிய பிறகே அடுத்து எண்ண செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.

    மாறுவேடம் போட்டு சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது சரிதானா? என்பதற்கு மக்கள் தான் முடிவு சொல்ல வேண்டும், கேரளாவில் கம்யூனிஸ்டு அரசிற்கு ஓட்டு போட்டது தவறாகிவிட்டது என மக்கள் நினைக்கும் நிலை தற்போது உள்ளது. இந்த எண்ணம் நல்ல ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.

    கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து சத்தம் போட்டு கடவுளை மதிக்காமல், ஆசாரங்களை மதிக்காமல் செயல்படுகின்றனர்.

    இதுநாள் வரை ஆச்சாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார். கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு ஐயப்பன் அதனை திருப்பி கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #SureshGopi

    சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருப்பதாக நடிகர் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். #Sabarimala #SureshGopi
    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி பேசும்போது, ’சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருக்கிறேன்.

    காணிக்கைக்கான உண்டியல்கள் இல்லாத வகையில் புதிய கோயிலை அமைக்கும் திட்டம் என் மனதில் உள்ளது. இதற்கான விளம்பரம் விரைவில் வெளியாகும். மத்திய அரசோ, மாநில அரசோ இடம் ஒதுக்கித்தந்தால் உடனே கோயில் கட்டப்படும். அல்லது நல்லவர்கள் யாராவது சபரிமலையை ஒட்டியுள்ள பகுதியில் இடம் வழங்கினால் அங்கு கோயில் அமைக்கலாம்.



    சபரிமலை அல்லது பத்தணம்திட்டா பகுதியை ஒட்டிய பகுதியில் புதிய கோயில் கட்டும் திட்டம் உள்ளது. புதிய கோயில் விக்கிரகம் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்தக் கோயிலில் பெண் பூசாரியை நியமிப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறேன்” என்று பேசியுள்ளார். #Sabarimala #SureshGopi
    சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராட தயாராக உள்ளேன் என்று சுரேஷ்கோபி எம்.பி. கூறினார். #SureshGopi #Sabarimala
    நாகர்கோவில்:

    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    1840-ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை இன்று ஊர்வலமாக புறப்பட்டது.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை தமிழக, கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டுச் சென்ற காட்சி.


    அப்போது கேரள, தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    சபரிமலை தீர்ப்பு என்பது தனி வி‌ஷயம். அது குறித்து நான் அரசியல் ரீதியாக எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். பாரம்பரிய கலாசாரம், மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராடவும் தயாராகவும் உள்ளேன். போராட்டத்துக்கு முன் நிற்கவும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவ்வாறு கூறினார்.  #SureshGopi #Sabarimala

    படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் சுரேஷ் கோபி, பின்னர் வெளியில் மக்களுடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். #SureshGopi
    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க தலைவர் அபிமன்யூ படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்னொரு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அபிமன்யூவை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    மாணவர் அபிமன்யூ கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அபிமன்யூ ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்திற்கு சிலர் உதவிகளும் செய்ய முன்வந்தனர்.

    மேலும் மாணவர் அபிமன்யூ குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தத்தெடுத்துள்ளது. அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அந்த கட்சி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடிகரும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ்கோபி மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அபிமன்யூ பெயரில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.



    நடிகர் சுரேஷ்கோபி அங்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான ரசிகர்கள் அந்த வீடு முன்பு திரண்டனர். துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்த சுரேஷ்கோபி ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்.

    இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்க வீட்டிற்கு சென்ற இடத்தில் சுரேஷ்கோபி செல்பி எடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். 
    ×