search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STUDENTS ACHIEVEMENT"

    • 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.
    • தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர்சகோதயா பள்ளிகளுக்கான யோகாசன போட்டி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டஅளவிலான பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.

    இதேபோல தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.இப்போட்டியில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில், பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியின் 49மாணவ, மாணவிகளில்33 மாணவர்கள் முதல் பரிசும், 14 மாணவர்கள் 2ம்பரிசும் பெற்று சாம்பியன்பட்டம் பெற்றனர்.

    இதில் மாணவி அர்சிதா 138 புள்ளிகளும்,பிரதிஷா 131 புள்ளிகளும் பெற்று இலங்கையில்நடக்கும் யோகாசன போட்டிக்கு தகுதி பெற்றனர்.இதையடுத்து யோகாசன போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர்சிவசாமி, செயலாளர்சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, முதல்வர் லாவண்யா ஆகியோர்பாராட்டினர்.

    • பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
    • உதவி தலைமையாசிரியா் பிரபாவதி, உடற்கல்வி ஆசிரியா் மோகன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

     அவிநாசி:

    அவிநாசியில் உள்ள தனியாா் பள்ளியில் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் கவின் மற்றும் லக்‌ஷிதா, 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் புவனேஷ்வரி ஆகியோா் தனிநபா் சாம்பியன் கோப்பையை வென்றனா்.

    மேலும் மேசைப்பந்து ஒற்றையா், இரட்டையா், கால்பந்து, உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். மாவட்ட அளவிலான 3000 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் மாணவி துளசிமணி முதலிடம் பிடித்து, திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றாா்.

    வெற்றி பெற்ற மாணவா்களை கருவலூா் பள்ளித் தலைமையாசிரியா் சத்தியபாமா, உதவி தலைமையாசிரியா் பிரபாவதி, உடற்கல்வி ஆசிரியா் மோகன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

    மேலும்அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் யாகவராஜ் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில்100 மீட்டா், 200 மீட்டா், மும்முறை நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று தனி நபா் சாம்பியன் கோப்பையை வென்றாா். இதேபோல பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். இவா்களுக்கு அவிநாசி அரசுப்பள்ளி ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

    • சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    டெல்லியில் ஸ்கூல் கேம்ஸ் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் கனிஷ்கா, நகசோன், திருமுருகன், வர்சன் ஸ்ரீ, முகேஷ், சபரி வாசன், தருண், கணேஷ்குமார், கார்த்திக்குமார், செல்லபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்,

    இந்த போட்டி ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்புசண்டை, சுருள் வாள், வாள் வீச்சு, வேல்கம்பு பிரிவுகளில் நடைபெற்றது, இதில் ஒற்றைக் கம்பு பிரிவில் மாணவர்கள் நகசோன், கார்த்திகுமார், கனிஷ்கா ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

    மாணவர் வர்சன் ஸ்ரீ, திருமுருகன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். மாணவர்கள் சபரிவாசன், முகேஷ், செல்லபாண்டி ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர்.

    இரட்டை கம்பு பிரிவில் கனிஷ்கா மற்றும் முகேஷ் மூன்றாம் பரிசு வெண்கலப் பதக்கம் வென்றனர்.மேலும் சுருள் வாள் பிரிவில் வர்சன் ஸ்ரீ 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.திருமுருகன் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

    வாள் வீச்சுப் பிரிவில் நகசோன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். கனிஷ்கா, செல்லபாண்டி ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    கம்பு சண்டை பிரிவில் நகசோன், செல்ல பாண்டி ஆகியோர் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். திருமுருகன், கணேஷ்குமார், தருண் ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    வேல்கம்பு பிரிவில் சபரி வாசன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மத்யு இம்மானுவேல் பாராட்டினார்.

    • பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • திருச்சி மாவட்டத்தில் 92.25 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    திருச்சி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பிளஸ்-2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும், 10-ம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும் முதலிடத்ைத பிடித்துள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 92.25 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 16,615 பேரும், மாணவிகள் 16,942 பேரும் தேர்வு எழுதினர். இதில் 14,562 மாணவர்களும், 16,396 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.15 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 4,186 பேரும், மாணவிகள் 3,704 பேரும் தேர்வு எழுதினர். இதில் 4,018 மாணவர்களும், 3,647 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரியலூர் மாவட்டத்தில்91.66 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 5,237 பேரும், மாணவிகள் 4,993 பேரும் தேர்வு எழுதினர். இதில் 4,619 மாணவர்களும், 4,758 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கரூர் மாவட்டத்தில் 83 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 6,080 பேரும், மாணவிகள் 5,971 பேரும் தேர்வு எழுதினர். இதில் 4,640 மாணவர்களும், 5,362 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 87.85 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 11,375 பேரும், மாணவிகள் 11,085 பேரும் தேர்வு எழுதினர். இதில் 9,381 மாணவர்களும், 10,350 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 95.93 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 14,890 பேரும், மாணவிகள் 16,941 பேரும் தேர்வு எழுதினர். இதில் 13,894 மாணவர்களும், 16,643 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் 9,933 பேரும், மாணவிகள் 3,734 பேரும் தேர்வு எழுதினர். இதில் 3,836 மாணவர்களும், 3,674 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 96.47 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,923 பேரும், மாணவிகள் 4,555 பேரும் தேர்வு எழுதினர். இதில் 3,742 மாணவர்களும், 4,337 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் கரூர் மாவட்டத்தில் 92.37 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 4,834 பேரும், மாணவிகள் 5,411 பேரும் தேர்வு எழுதினர். இதில் 4,305 மாணவர்களும், 5,158 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 91.58 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 8,606 பேரும், மாணவிகள் 9,969 பேரும் தேர்வு எழுதினர். இதில் 7,519 மாணவர்களும், 9,492 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.


    ×