search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports Festival"

    • தொழிலாளர்களுக்கான 41-வது விளையாட்டு விழா ஆலையின் வளாகத்தில் நடந்தது.
    • இந்த விழாவிற்கு மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே. ராம்குமார்ராஜா, நளினா ராமலட்சுமி தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ், சுதர்சனம் பேப்ரிக்ஸ் மற்றும் தரம் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கான 41-வது விளையாட்டு விழா ஆலையின் வளாகத்தில் நடந்தது.

    ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா வழிகாட்டுதலின்படி நடந்த இந்த விழாவிற்கு மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே. ராம்குமார்ராஜா, நளினா ராமலட்சுமி தலைமை தாங்கினர். முதன்மை நிதிநிலை அதிகாரி விஜய்கோபால் வரவேற்றார்.

    தொழிற்சங்க தலை வர்கள் மகாலிங்கம் (எச்.எம்.எஸ்),ரமேஷ் (ஏ.ஜ.டி.யு.சி),சுரேஷ் (ஐ.என்.டி.யு.சி) ஆகியோர் பேசினர். நிர்வாக இயக்குனர்கள் பேசுகையில், ராமராஜூ சர்ஜிகல் காட்டன்மில்ஸ் குழுமத்தில் தொழிலாளர்கள் முழுமை யான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணிபுரிவதால் ஒரு முதிர்ந்த அறிவு திறனும், இளமையான உத்வேகமும் கலந்த நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது என்றனர்.

    கடந்த 2 மாதங்களாக நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசுகளாக வழங்கப் பட்டது. கடந்த ஆண்டில் ஆலையில் சிறந்த முறையில் பணியாற்றிய தொழிலாளர்கள், 15 முதல் 35 ஆண்டுகள் வரை பணியாற்றி வரும் தொழிலாளர்கள், விடுப்பு எடுக்காமல் பணிபுரியும் தொழிலாளர்கள், வருடத்தில் 295 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் என சுமார் 963 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசுடன் சான்றிதழ்களை மேனேஜிங்டை ரக்டர்கள் ராம்குமார் ராஜா, நளினா ராமலட்சுமி, டைரக்டர் கஜபதி என்ற என்.ஆர்.கே. ஸ்ரீகண்டன் ராஜா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    ராம்கோ குரூப் பிரசிடெண்ட் என். மோகனரங்கன், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஹேமந்த்குமார், பொது மேலாளர் சுந்தரராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறை துணைப் பொது மேலாளர் ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் ராயல் பள்ளிகளின் விளையாட்டு விழா நடந்தது.
    • இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் பங்கேற்றார்.

    மதுரை

    மதுரை விளாங்குடி ராயல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெத்தானியாபுரம் ராயல் பப்ளிக் மெட்ரிக் பள்ளிகளின் 37-வது விளையாட்டு விழா நடந்தது.

    சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், மதுரை மாநகராட்சி கவுன்சிலரும், தி.மு.க. செயற்குழு உறுப்பினருமான மா. ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராயல் குழுமப் பள்ளி களின் நிர்வாக இயக்குநர் மகிமா விக்னேஷ் வரவேற்றார். பள்ளியின் நிறுவனத் தலைவரும், வழக்கறிஞருமான ராஜாராம், நிர்வாக இயக்குநர் கெவின் ராஜாராம் ஆகியோர் பேசினர். தொடர் ஓட்டமாக கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் ஜோதியை பெற்று மா.ஜெயராம் விழாவை தொடங்கி வைத்தார்.

    மாணவ- மாணவிகளின் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்ற குழு வாரியான அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினரான விஜய்சங்கர் ஏற்றுக் கொண்டு விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சுழற் கோப்பையை பல்லவன் அணி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரருக்கான வெற்றி கோப்பையை பிளஸ்-2 மாணவர் பாலசுப்பிரமணியன் பெற்றார்.

    1500 மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் கண்டுகளித்தனர். நாக ஜோதி சித்தன், ராயல் குழுமப் பள்ளிகளின் தாளாளர் ஷகிலா தேவி ராஜாராம், நிர்வாக இயக்குநர்கள் தீபிகாபிரேம்குமார், கெவின் குமார் ராஜா ராம், மகிமா விக்னேஷ் மற்றும் இரு பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியைகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • தயான்சந்த்ன் சிறப்புகளை விளக்கும் வகையில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
    • கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

    அவினாசி,ஆக.31-

    தேசிய விளையாட்டு தினத்தையொட்டி திருப்பூர் சோளிபாளையத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளியில் தயான்சந்த்ன் சிறப்புகளை விளக்கும் வகையில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உதவி தலைமையாசிரியர் பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இப்பள்ளியில் தேசத் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் நவரோஜி ,ராய் ,வித்யாசாகர், சிவாஜி, பெயர்களில் மாணவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டனர். இந்த அணிகளுக்கு இடையே கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம் ஆகியவற்றுக்கு இறுதிச்சுற்றுகள் நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி நிறுவனர் ஹேமா, தாளாளர் தேவராஜன், முதல்வர் ரேணு, துணை முதல்வர் லில்லிபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டி.ஆர். எஸ்.குளோபல் பப்ளிக் சீனியர் செகன்டரி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் 9-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டன்ட் கபில் வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக் கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது எனவும் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறினார்.

    தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு, என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள் வீரமணி, விஜயன், பாலாஜி மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவர் தலைவர் ஜோஷ்வா நன்றி கூறினார்.

    • மான்போர்டு பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
    • தாளாளர் விக்னேஷியஸ் தாஸ் தலைமையில் விளையாட்டு விழா நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள மான்போர்டு பள்ளியில் 9-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள் பெற்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக மண்டல அளவில் சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற (496/500) ஜனனிப்ரியா மற்றும் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி மண்டல மான்போர்டு சபை தலைவர் இருதயம் தலைமை தாங்கினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முகமது சலாஜுதீன் பங்கேற்று சிறப்பித்தார். தாளாளர் விக்னேஷியஸ் தாஸ் தலைமையில் விளையாட்டு விழா நடந்தது.

    • பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்வளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியின் 9-ம் ஆண்டு பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

    ரோவர் கல்வி குழுமங்களின் மேலாண் தலைவர் செவாலியர் வரதராஜன், தூய யோவான் சங்க அறக்கட்டளை அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன், கல்வி குழுமங்களின் துணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்வளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இனிதே நடைபெற்றது.

    மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சிறப்பு அழைப்பாளர் மற்றும் மேலாண் தலைவரால் வழங்கப்பட்டது. மேலும் மேலாண் தலைவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது சென்னையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை குறித்தும் , நமது நாட்டில் நடத்துவது பெருமைக்குரிய ஒன்று என்றும், அதில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெற்று வருகிறது என்பதை குறித்தும் பேசி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    பள்ளி முதல்வர் ஜீன் ஜாக்குலின் வழிகாட்டுதலுடன் துணை முதல்வர் பழனிச்சாமி அவர்கள் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு விழா அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நிறைவடைந்தது

    • புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-ம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
    • பள்ளியில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் ஜோதியினை கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-ம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    பள்ளியில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் ஜோதியினை கொண்டு வந்தனர். சிறப்பு விருந்தினர்களாக புதுவை தேசிய மாணவர் படை ஆணை யர் பியூஸ்ஸ்ரீவஸ் தவா, தனியார் நிறுவன மேலாளரும், முன்னாள் மாணவியுமான திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், தனியார் மருத்துவமனை இயக்குனர் நல்லாம், பள்ளி முன்னாள் மாணவியும், மருத்துவருமான விக்னிதா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பிரடெ ரிக் வரவேற்றார். இதில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா மற்றும் பள்ளியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சீதா ராமன், முத்தானந்தம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் ஹேமலதா, ராயர், வனிதா, மணிவண்ணன் , ஹேமந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×