என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளியில் விளையாட்டு விழா
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது
- பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் டி.ஆர். எஸ்.குளோபல் பப்ளிக் சீனியர் செகன்டரி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் 9-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டன்ட் கபில் வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக் கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது எனவும் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு, என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள் வீரமணி, விஜயன், பாலாஜி மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவர் தலைவர் ஜோஷ்வா நன்றி கூறினார்.






