search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Little Kingdom School"

    • லிட்டில் கிங்டம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனரும் முதன்மை முதல்வருமான ேஹமா கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் சோளிப்பாளையத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனரும் முதன்மை முதல்வருமான ேஹமா கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். 11ம் வகுப்பு மாணவர்கள் கருத்தரங்கு நடத்தினர். குடியரசு தினம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து மாணவர்களின் கொடி அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில்பள்ளி நிறுவனர், தாளாளர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • தயான்சந்த்ன் சிறப்புகளை விளக்கும் வகையில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
    • கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

    அவினாசி,ஆக.31-

    தேசிய விளையாட்டு தினத்தையொட்டி திருப்பூர் சோளிபாளையத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளியில் தயான்சந்த்ன் சிறப்புகளை விளக்கும் வகையில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உதவி தலைமையாசிரியர் பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இப்பள்ளியில் தேசத் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் நவரோஜி ,ராய் ,வித்யாசாகர், சிவாஜி, பெயர்களில் மாணவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டனர். இந்த அணிகளுக்கு இடையே கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம் ஆகியவற்றுக்கு இறுதிச்சுற்றுகள் நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி நிறுவனர் ஹேமா, தாளாளர் தேவராஜன், முதல்வர் ரேணு, துணை முதல்வர் லில்லிபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

    ×