என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
    X

    பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

    • பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்வளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியின் 9-ம் ஆண்டு பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

    ரோவர் கல்வி குழுமங்களின் மேலாண் தலைவர் செவாலியர் வரதராஜன், தூய யோவான் சங்க அறக்கட்டளை அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன், கல்வி குழுமங்களின் துணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்வளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இனிதே நடைபெற்றது.

    மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சிறப்பு அழைப்பாளர் மற்றும் மேலாண் தலைவரால் வழங்கப்பட்டது. மேலும் மேலாண் தலைவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது சென்னையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை குறித்தும் , நமது நாட்டில் நடத்துவது பெருமைக்குரிய ஒன்று என்றும், அதில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெற்று வருகிறது என்பதை குறித்தும் பேசி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    பள்ளி முதல்வர் ஜீன் ஜாக்குலின் வழிகாட்டுதலுடன் துணை முதல்வர் பழனிச்சாமி அவர்கள் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு விழா அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நிறைவடைந்தது

    Next Story
    ×