search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special pujas"

    • ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடந்தது
    • பூக்கள், வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று இரவு உற்சவர் ஆனந்த நடராஜர் ,சிவகாமி அம்பாள் சுவாமிகளுக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர், பல்வேறு வகையான பழசாறுகள், பூக்கள், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'சிவாய நம' என்ற கோஷத்தோடு நடராஜரை பக்தியோடு வழிபட்டு சென்றனர். 

    • ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் 3-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.
    • சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் 3-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது, இதனையொட்டி காலை கோபூஜை, சண்டி ஓமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் முன்னூர் கிராம குளக்கரையில் இருந்து சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக வந்து அங்காளம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர், இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஸ்வட்லானாக்ரூசர், இலோனா கலாட்டினோவா ஆகியோர் தமிழ்நாட்டின் ஆன்மீக கலாச்சாரத்தின் மீது பற்றுதல் கொண்டதன் காரணமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.அவர்களுக்கு கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தார்.

    பின்னர் நல்லடையில் உள்ள அக்னி ஸ்தலமான பரணீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர.

    இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    அங்கே சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகளிடம் ஆசீர் பெற்னர்.

    அவர்களுக்கு தர்மபுரம் ஆதீனம் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டினருடன் வந்திருந்த கோபிநாத், குரு, சாமி தரிசனம் செய்தனர்.

    • திருக்காட்டுபள்ளியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் அக்னீஸ்வர சுவாமி கோவில்.
    • ஏப்ரல் 4-ந்தேதி கோவிலில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் அக்னீஸ்வர சுவாமி கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவிற்கான தொடக்க நிகழ்வான பந்தக்கால் நடும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

    பந்தல்கால் முகூர்த்தத்துக்கான உபயோதாரர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தர்ப்பை, மாவிலை கட்டப்பட்டு பூக்களால்

    அலங்கரிக்கப்பட்டு சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பங்குனி உத்திர விழாகுழுவின் தலைவர் ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் முகூர்த்தக்கால் நடும் குழியில் நவதானியங்களை போட்டு, மேளதாளங்கள் முழங்க பந்தல்கால் அனைவரும் இணைந்து நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில்பங்குனி உத்திர விழா குழு தலைவர் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், கோவில் செயல் அலுவலர் சிவேந்திரராஜா, பேரூராட்சி செயல்அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் பங்குனி உத்தரவிழாகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து வரும் 26-ந்தேதி கோவிலின் முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னிஸ்வரர் வீதி உலா நடைபெறும்.

    பங்குனி உத்திர நாளான அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி காலை கோவிலில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    திருக்காட்டுப்பள்ளி நகர வீதிகளின் வழியே பஞ்சமூர்த்திகள் உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்ற காவிரி ஆற்றில் உள்ள அலங்கார பந்தலில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி அருள் பாலிப்பர்.

    அதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் இருந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    • தென்கொரியாவில் இருந்து ஜோதிட நிபுணர் பேராசிரியர் ஹவாய் வாஸ்செல் என்பவர் வருகை தந்தார்.
    • அவருக்கு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை டவுன், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சேந்தங்குடியில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வர சுவாமி என்கின்ற வள்ளலார் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ மேத்தா தக்ஷிணாமூர்த்தி என்ற பெயரில் குரு பகவான் கோயில் உள்ளது.

    இங்கு தென்கொரியாவில் இருந்து ஜோதிட நிபுணர் பேராசிரியர் ஹவாய் வாஸ்செல் என்பவர் வருகை தந்தார்.

    அவர் தமிழ் கலாச்சா ரத்தின் மேல் பற்று கொண்டு இந்து மதத்தில் மாறி தமிழ் பெயரான திருஞானசம்பந்தர் என பெயர் மாற்றிக் கொண்டு அஸ்ட்ராலஜி படித்து ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார்.

    நந்தி மேல் அமைந்து குருபகவான் காட்சி அளிப்பது இந்தியாவிலேயே வள்ளலார் கோயில் தான் என்பதை புரிந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிப்பாடு செய்தனர்.

    அவருக்கு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    இத்தலம் குருபகவானின் பரிகாரத்தலமாக விளங்கி வருவதால் வியாழன் தோறும் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

    • ஆடி 18, ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது
    • பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குன்றின் மீது உள்ள பசலிகுட்டை சுப்ரமணியசாமி திருக்கோயில் உள்ளது. ஆடி 18, ஒட்டி சுப்பிரமணிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருப்பத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, பெரிய, சிறிய, தேர் எடுத்து வந்தும் பொதுமக்கள் அலகு குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தினர், கோயிலுக்கு நல்லதம்பி எம் எல் ஏ, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ். அன்பழகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்னிசை கச்சேரி மற்றும் வான வேடிக்கைகள் நடந்தது. கோவிலில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு அனைத்து பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு இன்று கலெக்டர் அமர்குஷ்வாஹா உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.
    • இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, நாடி சந்தானம் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்திலுள்ள புத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு யாகசாலை அமைத்து யாகவேள்விகள் பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை லட்சுமி குபேர பூஜை, தனதான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், முதலாம் காலபூஜைகள் இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, நாடி சந்தானம் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றது.

    நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜைமகா பூர்ணாஹுதி மகாதீபாராதனைமுதலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின் காலை 10 மணிக்கு புத்துமாரியம்மன், செல்வகணபதி, பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவில் மற்றும் பரிவார கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.

    ×