என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடராஜருக்கு சிறப்பு பூஜைகள்
- ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடந்தது
- பூக்கள், வாசனை திரவியங்களால் அபிஷேகம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று இரவு உற்சவர் ஆனந்த நடராஜர் ,சிவகாமி அம்பாள் சுவாமிகளுக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர், பல்வேறு வகையான பழசாறுகள், பூக்கள், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'சிவாய நம' என்ற கோஷத்தோடு நடராஜரை பக்தியோடு வழிபட்டு சென்றனர்.
Next Story






