search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா
    X

    பங்குனி உத்திர விழா பந்தல் கால் முகூர்த்தம் நடந்தது.

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா

    • திருக்காட்டுபள்ளியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் அக்னீஸ்வர சுவாமி கோவில்.
    • ஏப்ரல் 4-ந்தேதி கோவிலில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் அக்னீஸ்வர சுவாமி கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவிற்கான தொடக்க நிகழ்வான பந்தக்கால் நடும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

    பந்தல்கால் முகூர்த்தத்துக்கான உபயோதாரர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தர்ப்பை, மாவிலை கட்டப்பட்டு பூக்களால்

    அலங்கரிக்கப்பட்டு சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பங்குனி உத்திர விழாகுழுவின் தலைவர் ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் முகூர்த்தக்கால் நடும் குழியில் நவதானியங்களை போட்டு, மேளதாளங்கள் முழங்க பந்தல்கால் அனைவரும் இணைந்து நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில்பங்குனி உத்திர விழா குழு தலைவர் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், கோவில் செயல் அலுவலர் சிவேந்திரராஜா, பேரூராட்சி செயல்அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் பங்குனி உத்தரவிழாகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து வரும் 26-ந்தேதி கோவிலின் முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னிஸ்வரர் வீதி உலா நடைபெறும்.

    பங்குனி உத்திர நாளான அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி காலை கோவிலில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    திருக்காட்டுப்பள்ளி நகர வீதிகளின் வழியே பஞ்சமூர்த்திகள் உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்ற காவிரி ஆற்றில் உள்ள அலங்கார பந்தலில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி அருள் பாலிப்பர்.

    அதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் இருந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    Next Story
    ×