search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர்  அருகே புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    திருவெண்ணைநல்லூர் அருகே புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • திருவெண்ணைநல்லூர் அருகே புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.
    • இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, நாடி சந்தானம் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்திலுள்ள புத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு யாகசாலை அமைத்து யாகவேள்விகள் பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை லட்சுமி குபேர பூஜை, தனதான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், முதலாம் காலபூஜைகள் இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, நாடி சந்தானம் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றது.

    நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜைமகா பூர்ணாஹுதி மகாதீபாராதனைமுதலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின் காலை 10 மணிக்கு புத்துமாரியம்மன், செல்வகணபதி, பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவில் மற்றும் பரிவார கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.

    Next Story
    ×