search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shaheen Afridi"

    • தனது புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு உள்ள அவர் புயலுக்கு முன் அமைதி என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    • டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு அவர் தயாராகி விடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    லாகூர்:

    டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. பாகிஸ்தான அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக விலகி இருந்தார்.

    இதனால் அவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை. காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் முழு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் தற்போது ஷாகின் அப்ரிடி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகிறது. எதிர்பார்த்தபடியே ஷாகின் அப்ரிடி உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு அவர் தயாராகி விடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    டி20 உலகக்கோப்பைக்கு 110 சதவீதம் உடல் தகுதியுடன் ஷாகின் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஷாகின் அப்ரிடி பங்கேற்பார் என தெரிகிறது. ஷாகின் அப்ரிடி தனது வேகப் பந்துவீச்சால் ரோகித் சர்மா கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டை கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தினார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    ஷாகின் அப்ரிடி காயமடைந்தது இந்தியாவுக்கு சாதகம் என கருதப்பட்டது. ஆனால் அவர் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார். இதனால் சோகத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இதனிடையே இந்த செய்தியை ஷாகின் ஆப்ரிடி, தனது டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.


    அதில் தனது புகைப்படத்தை பதிவிட்டு உள்ள அவர் புயலுக்கு முன் அமைதி என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இது டி20 உலகக்கோப்பைக்கு தான் தயாராகி விட்டேன் என்பதை மறைமுகமாக கூறுகிறார் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்திய அணியில் பும்ரா காயம் அடைந்து விலகிய நிலையில் பாகிஸ்தான் வீரர் முழு உடல் தகுதியை பெற்றிருப்பது இந்திய ரசிகர்களுடைய விரக்தி அடையச் செய்துள்ளது.

    • ஷாஹீன் ஷா அப்ரிடியை மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • வீரரின் நலன் கருதி, அவரை அங்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகினார். அவருக்கு வலது முழங்காளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார். ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடாவிட்டாலும் அவர் அமீரகத்தில் தங்கள் அணியிருடன் தங்கி காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், அவரை லண்டனுக்கு அனுப்பி உயர் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நஜீபுல்லா சூம்ரோ கூறும்போது, ஷாஹீன் அப்ரிடிக்கு தடையற்ற, அர்ப்பணிப்புள்ள முழங்கால் நிபுணர் பராமரிப்பு தேவைப்படுகிறது.

    உலகின் சிறந்த விளையாட்டு மருத்துவ வசதிகளை லண்டன் வழங்குகிறது. வீரரின் நலன் கருதி, அவரை அங்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்,'' என தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஷாஹீன் முழு உடற்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுழல் பந்துவீச்சாளர் சாஹால் சிரித்த முகத்துடன் ஒருசில நிமிடங்கள் ஜாலியாக பேசி அவருடைய காயத்தின் நிலைமை பற்றி கேட்டறிந்தார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    15-வது ஆசிய கோப்பை நாளை முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், குவைத் ஆகிய 6 அணிகள் போட்டி போட உள்ளன. ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று இந்தியாவும் பாகிஸ்தானும் பலபரீட்ச்சை நடத்துகிறது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார்.

    அவர் இந்த தொடரில் விலகியுள்ளது உண்மையாகவே பாகிஸ்தானுக்கு பின்னடைவாகும். இருப்பினும் அவரது அனுபவம் இதர பந்துவீச்சாளர்களுக்கு பயன்படும் என்பதற்காக காயத்தை சந்தித்தாலும் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்து கேப்டன் பாபர் அசாம் தங்கள் அணியுடன் அழைத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் இரு அணி வீரர்களும் துபாயில் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் இவர்கள் பயிற்சிக்கு செல்லும்போதும் முடித்து விட்டு திரும்பும் போதும் ஒருவருக்கு ஒருவரை சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

    அந்த வகையில் நேற்றைய தங்களது பயிற்சியை துவங்க மைதானத்துக்கு சென்ற இந்திய வீரர்கள் காயத்தால் அமர்ந்திருந்த சாஹீன் அப்ரிடியை பார்த்து எதிரணி என்பதையும் மறந்து நலம் விசாரித்தார்கள்.

    குறிப்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் சாஹால் சிரித்த முகத்துடன் ஒருசில நிமிடங்கள் ஜாலியாக பேசி அவருடைய காயத்தின் நிலைமை பற்றி கேட்டறிந்தார். அடுத்ததாக விராட் கோலியும் அவருடன் கை கொடுத்து காயத்தை பற்றி கேட்டறிந்ததுடன் அதிலிருந்து விரைவில் குணமடைய சில ஆலோசனைகளையும் வழங்கினார்.


    மேலும் நீங்கள் (விராட் கோலி) விரைவில் பார்முக்கு திரும்பி ரன்கள் அடிக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக சாஹீன் அப்ரிடி கூறினார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் வாழ்வில் இதெல்லாம் சகஜம் என்பதால் சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள் என்று ரிஷப் பண்ட் நலம் விசாரித்தார்.

    இறுதியாக காயத்திலிருந்து குணமடைந்தது சமீபத்தில் அணியில் இணைந்துள்ள கேஎல் ராகுல் மிகவும் தீவிரமாக அவரது காயத்தை பற்றி கேட்டறிந்தார். இப்படி பரம எதிரிகள் என்பதையும் தாண்டி நல்ல மனம் கொண்ட மனிதர்களாக, காயத்தின் வலியை பற்றி தெரிந்த கிரிக்கெட் வீரர்களாக ஷாஹீன் அப்ரிடியிடம் இந்திய வீரர்கள் முழு அன்பை வெளிப்படுத்தி பாசத்துடன் நலம் விசாரித்ததை பார்த்த பாகிஸ்தான் மனமுருகி சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

    இவர்கள் சந்தித்து பேசும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்கவில்லை.
    • ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 28-ந்தேதி துபாயில் நடக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடக்கிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்ன் மற்றும் தகுதி சுற்றில் இருந்து நுழையும் ஒரு அணி ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    தகுதி சுற்று ஆட்டத்தில் இருந்து முன்னேறும் நாடு எது என்று நாளைக்குள் தெரிந்து விடும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆங்காங், குவைத் ஆகியவை போட்டியில் உள்ளன.

    ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷகீன்ஷா அப்ரிடி ஆடவில்லை. காயத்தால் அவர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    இதேபோல இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயத்தால் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நுஷன் துஷாரா சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் வேகப்பந்து வீரர் ஷகீன்ஷா அப்ரிடி ஆசிய கோப்பை போட்டியில் ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என்று அந்நாட்டு முன்னாள் கேப்ட னும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அப்ரிடி ஆடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகும். கடந்த முறை இந்தியாவுடனான போட்டியில் அவர் நெருக்கடி கொடுத்தார். கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் முதல் ஓவரி லேயே அவர் சரியான நெருக்கடியை கொடுத்தார். தற்போது ஷகீன்ஷா அப்ரிடி காயத்தால் விலகி உள்ளது பாதிப்பாகும்.

    இரு அணிகளும் மோதுவது விறுவிறுப்பாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்கவில்லை.

    இவ்வாறு இன்சமாம் கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 28-ந்தேதி துபாயில் நடக்கிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தானை பழிவாங்கும் ஆர்வத்தில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு துபாயில் மோதிய 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது. உலக கோப்பையில் அந்த அணி முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி இருந்தது.

    அதே நேரத்தில் 50 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய அனைத்து ஆட்டத்திலும் (6 போட்டி) இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது.

    • பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படுபவர் ஷஹீன் அப்ரிடி.
    • காயம் காரணமாக இவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    துபாய்:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

    இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்தப் போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    ஷஹீன் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    வங்காளதேச அணி பேட்ஸ்மேனின் காலில் வேண்டுமென்றே பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்  வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து டாக்காவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது அந்த வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன் அபிப் ஹூசைன் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்து காலில் காயத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய பந்தில் அபிப் சிக்சர் அடித்ததால் கோபத்தை அப்ரிடி இந்த வகையில் வெளிப்படுத்தி நடவடிக்கையில் சிக்கி இருக்கிறார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. #AsiaCup2018 #MohammadAmir
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. ‘ஏ’ பிரிவில் இந்தியா முதல் இடத்தையும், பாகிஸ்தான் 2-வது இடத்தையும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தையும், வங்காள தேசம் 2-வது இடத்தையும் பிடித்தன.

    இன்று சூப்பர் 4 சுற்று தொடங்கின. முதல் நாளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அபு தாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.



    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது அமிர் அணியில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அறிமுகமாகியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் சதாப் கானுக்குப் பதிலாக நவாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பஹீம் அஷ்ரஃபிற்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ×