search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஷகீன்ஷா அப்ரிடி ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு- இன்சமாம் சொல்கிறார்
    X

    ஷகீன்ஷா அப்ரிடி ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு- இன்சமாம் சொல்கிறார்

    • பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்கவில்லை.
    • ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 28-ந்தேதி துபாயில் நடக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடக்கிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்ன் மற்றும் தகுதி சுற்றில் இருந்து நுழையும் ஒரு அணி ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    தகுதி சுற்று ஆட்டத்தில் இருந்து முன்னேறும் நாடு எது என்று நாளைக்குள் தெரிந்து விடும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆங்காங், குவைத் ஆகியவை போட்டியில் உள்ளன.

    ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷகீன்ஷா அப்ரிடி ஆடவில்லை. காயத்தால் அவர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    இதேபோல இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயத்தால் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நுஷன் துஷாரா சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் வேகப்பந்து வீரர் ஷகீன்ஷா அப்ரிடி ஆசிய கோப்பை போட்டியில் ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என்று அந்நாட்டு முன்னாள் கேப்ட னும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அப்ரிடி ஆடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகும். கடந்த முறை இந்தியாவுடனான போட்டியில் அவர் நெருக்கடி கொடுத்தார். கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் முதல் ஓவரி லேயே அவர் சரியான நெருக்கடியை கொடுத்தார். தற்போது ஷகீன்ஷா அப்ரிடி காயத்தால் விலகி உள்ளது பாதிப்பாகும்.

    இரு அணிகளும் மோதுவது விறுவிறுப்பாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்கவில்லை.

    இவ்வாறு இன்சமாம் கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 28-ந்தேதி துபாயில் நடக்கிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தானை பழிவாங்கும் ஆர்வத்தில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு துபாயில் மோதிய 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது. உலக கோப்பையில் அந்த அணி முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி இருந்தது.

    அதே நேரத்தில் 50 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய அனைத்து ஆட்டத்திலும் (6 போட்டி) இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது.

    Next Story
    ×