search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roger Federer"

    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #HalleOpen2018 #RogerFederer

    ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - அமெரிக்காவின் டென்னிஸ் குட்லாவை எதிர்கொண்டார். 

    இதன் முதல் செட்டை பெடரர் 7-6 (7-1) என போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த செட்டையும் பெடரர் 7-5 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (7-1), 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    தொடர்ந்து நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் படிஸ்டா ஆகுட், குரோசியாவின் போர்னா கோரிக் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை எதிர்கொள்வார். #HalleOpen2018 #RogerFederer
    ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மிலொஸ் ராவ்னிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஏழாம் நிலை வீரரான மிலொஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். 

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் ராவ்னிக், பெடரரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் பெடரர் இரண்டாவது செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றினார். 



    இதன்மூலம் 6-4, 7-6(7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெடரர் வெற்றி பெற்றதால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018
    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். #RogerFederer #WorldNo1 #RafaelNadal

    ஸ்டட்கர்ட்:

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 24-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசுடன் மோதினார். 1 மணி 51 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் பெடரர்  6-7(2-7), 6-2, 7-6(7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெடரர் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொள்கிறார்.

    நேற்றைய அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 36 வயதான பெடரர், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் பெடரர் முதலிட அரியணையில் ஏறுவார். ஸ்பெயினின் ரபெல் நடால் 2-வது இடத்துக்கு இறங்குவார். #RogerFederer #WorldNo1 #RafaelNadal 
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், நான்காம் நிலை வீரரான நிக் கிர்கியோசை எதிர்கொண்டார். 

    இப்போட்டியின் முதல் செட்டை கிர்கியோஸ் 7-6 (7-2) என போராடி கைப்பற்றினார். அதன்பின் சுதாரித்து கொண்ட பெரடர் இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் அந்த செட்டையும் பெடரர் 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார். இதன்மூலம்  6-7(2-7), 6-2, 7-6(7-5) என்ற செட்கணிக்கில் வெற்றி பெற்ற பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மிலொஸ் ராவ்னிக் - லூகாஸ் பவுல்லி ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியில் ராவ்னிக் 6-4, 7-6(7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் - மிலொஸ் ராவ்னிக் பலப்பரீட்சை செய்கின்றனர். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #NickKyrgios #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் குயிடோ பெல்லாவை எதிர்கொண்டார். 

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பெடரர் இரண்டாவது செட்டையும் 604 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பெடரர் வெற்றி பெற்று அரைறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு காலிறுதி சுற்று ஆட்டத்தில் நான்காம் நிலை வீரரான நிக் கிர்கியோஸ், ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபஸ் உடன் மோதினார். இப்போட்டியில் கிர்கியோஸ் 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர் - நிக் கிர்கியோஸ், மிலொஸ் ராவ்னிக் - லூகாஸ் பவுல்லி ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #RogerFederer #NickKyrgios #StuttgartOpen2018
    ஓய்வு காலம் முன்பைவிட நெருங்கியுள்ளது என்று 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். #RogerFederer
    சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் அரங்கில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறது. 36 வயதாகும் இவர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற, ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கடந்த வருடம் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றிய பெடரர், இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். பிரெஞ்ச் ஓபனில் விளையாடாத அவர், விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் களம் இறங்குகிறார்.

    36 வயதாகும் பெடரரிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கும்போதெல்லாம், டென்னிசை நான் ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஓய்வு பற்றி யோசிக்கவில்லை என்பார்.



    ஆனால், தற்போது தன்னுடைய ஓய்வு முன்பைவிட நெருங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெடரர் கூறுகையில் ‘‘என்னுடைய ஓய்வு முன்பை விட நெருங்கியுள்ளது. ஆனால், அது எப்போது முடிவிற்கு வரும் என்று எனக்கே தெரியாது.

    அது மிகவும் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். குறிப்பாக என்னுடைய குழந்தைகளையும், அவர்களை பள்ளிகளுக்கு செல்வதும் முக்கியமானது. அது எப்படி இருக்கப் போகிறது என்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #StuttgartOpen2018

    ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வரேவ்வை எதிர்கொண்டார். 

    இப்போட்டியின் முதல் செட்டை ஸ்வரேவ் 6-3 என கைப்பற்றினார். அதன்பின் பெடரர் சுதாரித்துகொண்டு சிறப்பாக விளையாடினார். அவர் அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரான லூகாஸ் பவுல்லி, ஜெர்மனியின் ருடோல்ப் மோலேகர் உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பவுல்லி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். #RogerFederer #StuttgartOpen2018
    டென்னிஸ் தரவரிசையில் நடாலை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க ரோஜர் பெடரர் திட்டமிட்டுள்ளார். #RogerFederer
    கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 20 முறை கைப்பற்றி உலக சாதனைப் படைத்திருக்கும் ரோஜர் பெடரர் டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 11-வது முறையாயாக சாம்பியன் பட்டம் வென்ற நடால் முதல் இடத்தில் உள்ளார்.

    பெடரர் மியாமில் நடைபெற்ற போட்டியில் மார்ச் 24-ந்தேதி விளையாடினார். அதன்பின் நடைபெற்ற செம்மண் போட்டிகளை தவிர்த்து புல்தரை போட்டிக்கு தயராகி வருகிறார்.



    விரைவில் ஸ்டட்கார்ட் ஓபன் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் முதல் இடத்தை பிடித்துவிடலாம். இதனால் எப்படியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் 36 வயதான பெடரர் உள்ளார்.
    20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ள பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை என நடால் கூறியுள்ளார். #RogerFederer #RafaelNadal

    உலகின் நம்பர்-1 வீரரான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11-வது முறை யாக கைப்பற்றி சாதித்தார். ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பெற்றுள் £ர். ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ளார். அவ ருக்கு அடுத்தப்படியாக நடால் உள்ளார். பெடரரின் சாதனையை நடால் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவர் கூறிய தாவது, ‘பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்க வில்லை. என்னை பொறுத்த வரை டென்னிஸ் மிகவும் முக்கியமானது தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை அல்ல. எனது உடல் தகுதி இருக்கும் வரை ஆடுவேன்’ என்றார். #RogerFederer #RafaelNadal

    2009-ல் நடந்த பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடாலை தோற்கடித்து, பெடரர் சாம்பியன் ஆக உதவியதற்கு அவர் இன்னும் தனக்கு நன்றி தெரிவிக்கவில்லை என ஸ்வீடன் வீரர் ராபின் சொடர்லிங் கூறியுள்ளார். #FrenchOpen #RogerFederer #RobinSoderling

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் 1891-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் 2009-ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் நடால், பெடரர், முர்ரே, ஜோகேவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் சுவிசர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    2009-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்று ஆட்டத்தில் அப்போது முதல் நிலையில் இருந்த நடால், 23-வது நிலையில் இருந்த ராபின் சொடர்லிங் உடன் மோதினார். இப்போட்டியில், ராபின் வெற்றி பெற்று, நடாலை வெளியேற்றினார். மேலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்ற அவர், பெடரரிடம் தோற்று சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தார்.



    இந்நிலையில், அந்த தொடரின் இறுதிப்போட்டியில் பெடரரிடம் தோல்வியடைந்த ஸ்வீடன் வீரர் ராபின் சொடர்லிங், அந்த தொடரில் தொடரில் ரபேல் நடாலை தோற்கடித்து, பெடரர் சாம்பியன் ஆக உதவியதற்கு தனக்கு பெடரர் இதுவரை நன்றி கூறவில்லை என கிண்டலாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் நன்றி சொல்வார் என இப்போது வரை காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். #FrenchOpen #RogerFederer #RobinSoderling
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்தார். #RogerFederer #RafaelNadal
    மாட்ரிட்:

    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,950 புள்ளிகள்) மாட்ரிட் ஓபன் போட்டியில் கால் இறுதியில் வெளியேறியதால் ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 12-வது இடத்தில் இருந்து 18-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு ஜோகோவிச் முதல் 15 இடத்துக்கு வெளியே தள்ளப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.



    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (7,270 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,845 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,175 புள்ளிகள்) 3-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (5,505 புள்ளிகள்) 4-வது இடத்திலும் தொடருகின்றனர். செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா 2 இடம் முன்னேறி 8-வது இடத்தையும், மாட்ரிட் ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 5 இடம் முன்னேறி 15-வது இடத்தையும், ரஷிய வீராங்கனை ஷரபோவா 12 இடங்கள் ஏற்றம் கண்டு 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர்களில் யுகி பாம்ப்ரி 8 இடம் சரிந்து 94-வது இடம் பிடித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக யுகி பாம்ப்ரி ஓய்வில் இருந்து வருகிறார். சசிகுமார் முகுந்த் 45 இடங்கள் முன்னேறி 377-வது இடத்தை பெற்றுள்ளார். ராம்குமார் ராமநாதன் 124-வது இடத்தையும், பிராஜ்னேஷ் குணேஸ்வரன் 175-வது இடத்தையும், சுமித் நாகல் 226-வது இடத்தையும், அர்ஜூன் காதே 371-வது இடத்தையும், சகெத் மைனெனி 441-வது இடத்தையும், சுந்தர் பிராஷாந்த் 467-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 23-வது இடத்தில் நீடிக்கிறார். திவிஜ் சரண் 2 இடம் சரிந்து 44-வது இடத்தையும், லியாண்டர் பெயஸ் ஒரு இடம் பின்தங்கி 51-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 7 இடம் முன்னேறி 187-வது இடத்தையும், கர்மான் கவுர் 16 இடம் ஏற்றம் கண்டு 254-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 
    ×