search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stuttgart Open 2018"

    ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மிலொஸ் ராவ்னிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஏழாம் நிலை வீரரான மிலொஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். 

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் ராவ்னிக், பெடரரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் பெடரர் இரண்டாவது செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றினார். 



    இதன்மூலம் 6-4, 7-6(7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெடரர் வெற்றி பெற்றதால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், நான்காம் நிலை வீரரான நிக் கிர்கியோசை எதிர்கொண்டார். 

    இப்போட்டியின் முதல் செட்டை கிர்கியோஸ் 7-6 (7-2) என போராடி கைப்பற்றினார். அதன்பின் சுதாரித்து கொண்ட பெரடர் இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் அந்த செட்டையும் பெடரர் 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார். இதன்மூலம்  6-7(2-7), 6-2, 7-6(7-5) என்ற செட்கணிக்கில் வெற்றி பெற்ற பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மிலொஸ் ராவ்னிக் - லூகாஸ் பவுல்லி ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியில் ராவ்னிக் 6-4, 7-6(7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் - மிலொஸ் ராவ்னிக் பலப்பரீட்சை செய்கின்றனர். #RogerFederer #MilosRaonic #StuttgartOpen2018
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #NickKyrgios #StuttgartOpen2018

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் குயிடோ பெல்லாவை எதிர்கொண்டார். 

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பெடரர் இரண்டாவது செட்டையும் 604 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பெடரர் வெற்றி பெற்று அரைறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு காலிறுதி சுற்று ஆட்டத்தில் நான்காம் நிலை வீரரான நிக் கிர்கியோஸ், ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபஸ் உடன் மோதினார். இப்போட்டியில் கிர்கியோஸ் 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர் - நிக் கிர்கியோஸ், மிலொஸ் ராவ்னிக் - லூகாஸ் பவுல்லி ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #RogerFederer #NickKyrgios #StuttgartOpen2018
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #RogerFederer #StuttgartOpen2018

    ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வரேவ்வை எதிர்கொண்டார். 

    இப்போட்டியின் முதல் செட்டை ஸ்வரேவ் 6-3 என கைப்பற்றினார். அதன்பின் பெடரர் சுதாரித்துகொண்டு சிறப்பாக விளையாடினார். அவர் அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரான லூகாஸ் பவுல்லி, ஜெர்மனியின் ருடோல்ப் மோலேகர் உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பவுல்லி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். #RogerFederer #StuttgartOpen2018
    ×