search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram nath Kovind"

    பெரு நிறுவனங்கள் திவால் ஆகும் போது வராக்கடன்களை திரும்ப செலுத்த வகை செய்யும் திவால் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். #PresidentKovind
    புதுடெல்லி:

    பெரு நிறுவனங்கள் தொழிலில் நொடிந்து திவாலாகும் போது, அதன் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோரும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவும், அதில் தொடர்புடையவர்களுக்கு உரிய நிதி ஆதாயங்கள் கிடைக்க வகை செய்வதற்காகவும் திவால் சட்டம் கொண்டுவரப்பட்டது. 

    ஆனால், அதில் உள்ள சில அம்சங்களை தவறாகப் பயன்படுத்தி பலர் ஆதாயமடைவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு திவால் அவசரச் சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

    திவாலான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தை அணுக அதில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டால், அதன் உரிமையாளர், மற்றொரு நிறுவனத்தின் வாயிலாக அதை ஏலம் எடுக்க அதில் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    புதிய சட்டத்தின்படி, வாராக் கடன்களை திருப்பிச் செலுத்திய பிறகே நலிவடைந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏலத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர். இத்தகைய கட்டுப்பாடுகளால் திவால் சட்டத் திருத்தத்தை எவரும் தவறாகப் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது. 

    இந்த அவசர சட்டம் மூன்று மாதங்களில் காலாவதி ஆகிவிடும் என்பதால், கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் திவால் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இது நிரந்தர சட்டமாகியுள்ளது.
    ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒரு நாள் பயணமாக நாளை திரிபுரா மாநிலத்திற்கு செல்ல உள்ளார். #RamNathKovind
    அகர்தலா :

    ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நாளை திரிபுராவிற்கு பயணம் செய்கிறார். விமானப்படை சிறப்பு விமானத்தில் செல்லும் அவர் நாளை காலை 11 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள உதய்பூர் சென்றடைகிறார். அங்கு, சப்ரூம் - உதய்பூர் இடையே புதிதாக போடப்பட்டுள்ள இருவழி தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைக்க உள்ளார்.

    இதைத்தொடர்ந்து, அங்குள்ள மாதா திரிபுரேஷ்வரி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் ராம் நாத் கோவிந்த் நாளை மறுதினம் காலை டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ராம் நாத் கோவிந்த் திரிபுராவிற்கு முதல் முறை பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind
    ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை உயிரோடு எரித்துக்கொன்ற தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். #RamNathKovind
    புது டெல்லி :

    பீகார் மாநிலம், வைசாலி மாவட்டதில் உள்ள ரகோர்பூர் கிராமத்தை சேர்ந்த விஜேந்திர மஹ்டோ, கடந்த 2005-ம் ஆண்டு தமது எருமை மாட்டை திருடினார்கள் என ராய், வசிர் ராய் மற்றும் அஜய் ராய் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, ராய் என்பவர் தன் மீது போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என விஜேந்திர மஹ்டோவிற்கு அழுத்தம் கொடுத்தார்.

    இதற்கு, உடன்படாத காரணத்தினால் விஜேந்திர மஹ்டோவின் வீட்டிற்கு ராய் நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்றார். இதில், மஹ்டோ, அவரது மனைவி மற்றும் அவரது 5 குழந்தைகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலைசெய்த காரணத்தால் ராய்க்கு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது.

    இதை எதிர்த்து கடந்த 2013-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ராய் மேல்முறையீடு செய்தார். ஆனால் ராயின் மனுவை நிராகரித்து அவரின் தூக்கு தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

    இந்நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க கோரி ராய்,  ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு கருணை மனு எழுதியிருந்தார். பரிசீலனையில் இருந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி ஜனாதிபதி நிராகரித்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், ஜானாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவியேற்ற பின் நிராகரிக்கும் முதல் கருணை மனு இது என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind
    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுகொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுத்து விட்டார். #RamNathKovind
    சிம்லா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் 6 நாள் ஓய்வுமுறை பயணமாக நேற்று இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

    சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் வரவேற்றனர். 

    சிம்லா நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோலான் மாவட்டத்தில் உள்ள நவ்னி பகுதியில் அமைந்திருக்கும் டாக்டர் ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    இவ்விழாவில், அவருக்கு அறிவியல் துறைசார்ந்த கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கான, குறிப்புகள் அடங்கிய பட்டயம் வாசிக்கப்பட்ட பின்னர், தனக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுகொள்ள ராம்நாத் கோவிந்த் மறுத்து விட்டார்.

    கொள்கை அடிப்படையில் இந்த பட்டத்தை பெற்றுகொள்வதற்கான துறைசார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் இந்த பட்டத்தை ஏற்றுகொள்ள விரும்பவில்லை என தனது உரையின்போது அவர் குறிப்பிட்டார்.  #tamilnews #RamNathKovind 
    ×