என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accepet"

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுகொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுத்து விட்டார். #RamNathKovind
    சிம்லா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் 6 நாள் ஓய்வுமுறை பயணமாக நேற்று இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

    சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் வரவேற்றனர். 

    சிம்லா நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோலான் மாவட்டத்தில் உள்ள நவ்னி பகுதியில் அமைந்திருக்கும் டாக்டர் ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    இவ்விழாவில், அவருக்கு அறிவியல் துறைசார்ந்த கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கான, குறிப்புகள் அடங்கிய பட்டயம் வாசிக்கப்பட்ட பின்னர், தனக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுகொள்ள ராம்நாத் கோவிந்த் மறுத்து விட்டார்.

    கொள்கை அடிப்படையில் இந்த பட்டத்தை பெற்றுகொள்வதற்கான துறைசார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் இந்த பட்டத்தை ஏற்றுகொள்ள விரும்பவில்லை என தனது உரையின்போது அவர் குறிப்பிட்டார்.  #tamilnews #RamNathKovind 
    ×