search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "punnainallur mariamman"

    பிரசித்தி பெற்ற சக்தி தலமான புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் 1,000 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    தஞ்சை புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற சக்தி தலமாக மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருந்து 1,000 பால்குட ஊர்வலம் நேற்று காலை புறப்பட்டது. நாதஸ்வர இசையுடனும், வாண வேடிக்கையுடனும், வேத கோஷங்களுடன் புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அங்கு 4 ஆயிரம் லிட்டர் பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் வாணவேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படும்.

    அதன்படி தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் ஆண்டுதோறும் பால் குட ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அதன்படி மாசிமக திருநாளையொட்டி 13-ம் ஆண்டு 1,008 பால்குடம் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    பால்குட ஊர்வலத்துக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே முன்னிலை வகித்தார். இதில் தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆலோசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புன்னைநல்லூரில் கைலாசநாதர்கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு 4 ராஜவீதிகள் வழியாக சென்று மாரியம்மன்சன்னதியை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானமும் வழங்கப் பட்டது. மாலையில் விஷ்ணுதுர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், உற்சவஅம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு உகந்த இந்த பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    புன்னை நல்லூர் மாரியம்ம்மா
    புவிதனையே காருமம்மா
    தென்னை மரத் தோப்பிலம்மா
    தேடியவர்க் கருளுமம்மா

    வெள்ளைமனம் கொண்ட அம்மா
    பிள்ளை வரம் தாரும் அம்மா
    கள்ளமில்லாக் காளியம்மா
    உள்ளமெல்லாம் நீயே அம்மா

    கண்கண்ட தெய்வம் அம்மா
    கண்நோயைத் தீர்த்திடம்மா
    பெண் தெய்வம் நீயே அம்மா
    பேரின்பம் அளித்திடம்மா

    வேப்பிலையை அணிந்த அம்மா
    வெப்பு நோயை நீக்கிடம்மா
    காப்புதனை அணிந்த அம்மா
    கொப்புளங்கள் ஆற்றிடம்மா

    பாலாபிஷேகம் அம்மா
    பாசத்தினைக் கொடுத்திடம்மா
    காலார நடக்க வைத்தே
    காலனையே விரட்டிடம்மா

    ஆயிரம் பேர் கொண்ட அம்மா
    நோயினின்று காத்திடம்மா
    தாயினது பாசந்தன்னை
    சேய் எனக்கு அருளிடம்மா

    வேனில்கால வேளையம்மா (உந்தன்)
    மேனிதன்னில் வேர்க்குதம்மா
    இளநீரில் குளித்திடம்மா
    இன்னருளை ஈந்திடம்ம்மா

    தேனில் நன்கு குளித்திடம்மா
    வானின் மீது உலவிடம்மா
    வளமார வாழ்ந்திடம்மா
    வாயார வாழ்த்திடம்மா 
    தஞ்சை அருகே புன்னைநல்லூரில் அமைந்து உள்ள மாரியம்மன் கோவிலில் தெப்ப மகோற்சவ விழாவையொட்டி நேற்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
    தஞ்சை அருகே புன்னைநல்லூரில் அமைந்து உள்ள மாரியம்மன் கோவிலில் தெப்ப மகோற்சவ விழாவையொட்டி நேற்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். 
    தஞ்சையை அடுத்து உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சையை அடுத்து உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தஞ்சை மட்டும் அல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இதனால் அந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 14-ம் ஆண்டாக 1008 திருவிளக்குபூஜை நேற்று நடைபெற்றது.

    இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜைக்குரிய பொருட்கள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை கவுரவ தலைவர் கிருஷ்ணசாமிவாண்டையார் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே கலந்துகொண்டார்.

    இதற்கான ஏற்பாடுகளை செயல் தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வேலுசாமி, பொருளாளர் துரைராஜன், ராமகிருஷ்ணன், முருகன், பிரபு, சிவாஜிகணேசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×