search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power generation"

    • சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
    • மின்துறையில் 8 ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி, ஒளி காட்சி நடைபெற்றது.

    வேதாரண்யம் :

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தார். மாவட்ட மேற்பார்வை பொறியளார் சதீஷ்குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் புகழேந்தி ,ஆத்மா குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் சோழன், உதவி செயற்பொறியாளர்கள் ரவிகுமார், மலர்வண்ணன், இளம் மின்பொறியாளர் அன்பரசன், உதவி மின்பொறியாளர்கள் மனோகரன், சுப்பிர–மணியன், பாரதிதாசன் கல்லூரி முதல்வர் முருகன், கல்லூரி நாட்டு நலதிட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட மின்துறை அலுவலர்கள் பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் மின்துறையில் 8ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி ஒளி காட்சி மின்சார விழிப்புணர்வு மின்சார சிக்கனம், குறித்தும் வருங்காலத்தில் மின் சேவையை நிவர்த்தி செய்யசூரிய சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு வேதா–ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பரிசுகள் வழங்கினார். முடிவில் நாகை கோட்டபொறியார் சேகர் நன்றி கூறினார்.

    மேட்டூர் புதிய அனல் மின் நிலைய பாய்லரில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று நள்ளிரவு முதல் 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் பழைய மற்றும் புதிய மின் நிலையங்கள் உள்ளன. பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்களில் தலா 210 மெகாவாட் மூலம் 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதே போல புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மின்சாரம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு புதிய அனல் மின் நிலைய பாய்லரில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆனாலும் இன்று காலை வரை புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கவில்லை. இதனால் அந்த அனல் மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இடங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி முடிவடைந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இரு அணு உலைகள் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணு உலையிலும் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகளும் நிறுத்தப்பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பணி முடிவடைந்து 2-வது அணுஉலையில் மீண்டும் இன்று மின்உற்பத்தி தொடங்கியது.

    முதலில் 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. அதனை படிப்படியாக அதிகரிக்கும் நடவடிக்கையில் அணுமின் நிலைய ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


    நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்உற்பத்தி 1,989 மெகாவாட்டாக குறைந்தது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு 4 அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மின்உற்பத்தி திறன் 2,990 மெகா வாட் ஆகும்.

    இதில் முதல் அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 600 மெகா வாட் ஆகவும், 1-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மின்உற்பத்தி திறன் 420 மெகாவாட் ஆகும். 2-வது அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 1,470 ஆகவும், 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் உற்பத்தி திறன் 500 மெகாவாட்டாகவும் உள்ளது.

    தற்போது 2-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அங்கு மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மற்ற 3 அனல் மின்நிலையங்களில் 1 யூனிட்டில் மட்டும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அந்த யூனிட்டில் மட்டும் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற யூனிட்டுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி முதலாவது அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி 411 மெகா வாட்டாக உள்ளது. முதலாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 210 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2-வது அனல் மின்நிலையத்தில் 1,368 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. வழக்கமாக என்.எல்.சி.யில் உள்ள அனல் மின் நிலையங்களில் 2,990 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். ஆனால் தற்போது இந்த 3 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து மின் உற்பத்தி 1,989 மெகா வாட்டாக குறைந்துள்ளது.
    தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்திருப்பதால் அனல் மின்நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. காற்றாலை மின் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி கடந்த மாதம் 15-ந் தேதியே தொடங்கிவிட்டது. தற்போது காற்றாலைகள் மூலம் படிப்படியாக மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    காற்றலை மின்உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அனல் மின் உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரம் முழுஅளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், சூரியசக்தி மூலம் மின் உற்பத்தியும் சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 மெகாவாட் வரை நடந்துவருகிறது.

    காற்றாலைகளின் அதிகமான மின் உற்பத்தி காரணமாக தமிழகத்தின் மின்தேவை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பதற்கும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    இதுகுறித்து அகில இந்திய காற்றாலை சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு காற்று சீசன் காலங்களில் மொத்த மின்சார உற்பத்தியில் 12 சதவீதம் (1,300 கோடி யூனிட்) காற்றாலை மூலம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் காற்றாலை மூலம் 6.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    கடந்த வாரம் ஒரே நாளில் 8.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. சராசரியாக ஒரு நாளைக்கு காற்றாலை மூலம் 2,500 முதல் 3 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×