search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thermal power plant"

    • அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
    • தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது.

    தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் தற்போது புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் புதிய அனல் மின் நிலையம் ரூ.6,500 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் கட்டுமான பணிகள் தற்போது முடிந்து அனல் மின் நிலையம் செயல்பட தயாராக உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது. இதன் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து 2019-ம் ஆண்டிலேயே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டோம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவும் இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது கொதிகலன் நீர் அழுத்த சோதனை, துணை கொதிகலன் எரியூட்டும் சோதனை, கொதிகலன் நீர் வெளியேற்ற முடியாத பகுதியில் நீர் அழுத்த சோதனை ஆகிய முக்கிய பணிகள் முடிக்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வர தயாராக உள்ளது.

    இந்த அனல் மின் நிலையத்துக்கு ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி பெறப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலம் சிங்கனேரி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் நிலக்கரி, ரெயில் மூலம் எடுத்து வரப்படும். இந்த அனல் மின் நிலையம் அடுத்தமாதம் (ஜனவரி) திறக்கப்பட்டு மின் உற்பத்தி உடனடியாக தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சிவக்குமார் பணிபுரிந்து வந்தார்.
    • விடுப்பில் இருந்து வந்த சிவக்குமார் தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் 2 குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகராஜ் மகன் சிவக்குமார் (வயது 21). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கள உதவியாளராக பணிபுரிந்து வந்தார். 10 நாள் மருத்துவ விடுப்பில் இருந்து வந்த இவர் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவலறிந்ததும் தெர்மல் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே அனல்மின்நிலைய தலைமை செயற்பொறியாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது என்று கூறியிருந்தார்.

    இதுகுறித்த விசாரணையின் அடிப்படையில், அனல்மின் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் இன்று போராட்டக்குழுவை சேர்ந்த அப்பாத்துரை, ரசல், பேச்சிமுத்து ஆகியோர் தலைமையில் அனல் மின்நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் 5-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்திருப்பதால் அனல் மின்நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. காற்றாலை மின் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி கடந்த மாதம் 15-ந் தேதியே தொடங்கிவிட்டது. தற்போது காற்றாலைகள் மூலம் படிப்படியாக மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    காற்றலை மின்உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அனல் மின் உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரம் முழுஅளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், சூரியசக்தி மூலம் மின் உற்பத்தியும் சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 மெகாவாட் வரை நடந்துவருகிறது.

    காற்றாலைகளின் அதிகமான மின் உற்பத்தி காரணமாக தமிழகத்தின் மின்தேவை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பதற்கும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    இதுகுறித்து அகில இந்திய காற்றாலை சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு காற்று சீசன் காலங்களில் மொத்த மின்சார உற்பத்தியில் 12 சதவீதம் (1,300 கோடி யூனிட்) காற்றாலை மூலம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் காற்றாலை மூலம் 6.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    கடந்த வாரம் ஒரே நாளில் 8.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. சராசரியாக ஒரு நாளைக்கு காற்றாலை மூலம் 2,500 முதல் 3 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×