என் மலர்tooltip icon

    இந்தியா

    நச்சு வாயுவை பிரித்தெடுப்பதிலிருந்து 78% அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விலக்கு.. காங்கிரஸ் கண்டனம்
    X

    நச்சு வாயுவை பிரித்தெடுப்பதிலிருந்து 78% அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விலக்கு.. காங்கிரஸ் கண்டனம்

    • சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முறை ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் என்று அழைக்கப்படுகிறது.
    • இது சுவாசப் பிரச்சனைகள், இதய நோய்களுக்கு முக்கிய காரணம்

    நாட்டில் 78% நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நச்சு வாயுவை பிரித்தெடுக்கும், காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை நிறுவுவதில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.

    நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்போது அனல் மின் நிலையங்களில் சல்பர் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள் புகைப்போக்கி வழியாக வெளியேறும். இவை காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும்.

    இந்த சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முறை ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு மில்லியன் (10 லட்சம்) அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களின் 10 கி.மீ. சுற்றளவுக்கு வெளியே உள்ள அனல் மின் நிலையங்கள் இந்த முறையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பொது சுகாதாரத்தை விட நிறுவனங்களின் வசதிக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் சாடியுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவுக்கு காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நிலக்கரி எரிப்பு இந்தியாவின் PM2.5 மாசுபாட்டில் சுமார் 15% பங்களிக்கிறது என்றும், இது சுவாசப் பிரச்சனைகள், இதய நோய்களுக்கு முக்கிய காரணம் என்றும் கோகோய் கூறினார்.

    இந்த முடிவு, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதோடு, கோடிக்கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் எச்சரித்தார்.

    Next Story
    ×