search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி என்.எல்.சி.யில் மின்உற்பத்தி 1,989 மெகாவாட்டாக குறைந்தது
    X

    நெய்வேலி என்.எல்.சி.யில் மின்உற்பத்தி 1,989 மெகாவாட்டாக குறைந்தது

    நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்உற்பத்தி 1,989 மெகாவாட்டாக குறைந்தது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு 4 அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மின்உற்பத்தி திறன் 2,990 மெகா வாட் ஆகும்.

    இதில் முதல் அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 600 மெகா வாட் ஆகவும், 1-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மின்உற்பத்தி திறன் 420 மெகாவாட் ஆகும். 2-வது அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 1,470 ஆகவும், 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் உற்பத்தி திறன் 500 மெகாவாட்டாகவும் உள்ளது.

    தற்போது 2-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அங்கு மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மற்ற 3 அனல் மின்நிலையங்களில் 1 யூனிட்டில் மட்டும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அந்த யூனிட்டில் மட்டும் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற யூனிட்டுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி முதலாவது அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி 411 மெகா வாட்டாக உள்ளது. முதலாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 210 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2-வது அனல் மின்நிலையத்தில் 1,368 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. வழக்கமாக என்.எல்.சி.யில் உள்ள அனல் மின் நிலையங்களில் 2,990 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். ஆனால் தற்போது இந்த 3 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து மின் உற்பத்தி 1,989 மெகா வாட்டாக குறைந்துள்ளது.
    Next Story
    ×