search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus 1 student"

    உல்லாச வாழ்க்கைக்காக பைக்குகளை திருடி விற்ற பள்ளி மாணவன் மற்றும் வாலிபரை கைது செய்த போலீசார் 19 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை சென்னலேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    ஜெய்சங்கர் தன்னுடைய பைக்கை கலவை காளிஅம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வையாபுரி என்பவரது வீட்டில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வையாபுரி வீட்டு வளாகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ஜெய்சங்கர் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பிவந்து பார்த்தார். அப்போது, பைக் திருடு போயிருந்தது.

    உடனடியாக கலவை போலீசில் புகார் அளித்தார். ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். கலவை பஸ்நிலையத்தில் திருடு போன ஜெய்சங்கரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

    அங்கிருந்த பைக் திருடிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பள்ளிகொண்டா வேப்பூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவன் என்பது தெரியவந்தது.

    மற்றொருவர், பள்ளிகொண்டா ஒலகாச்சி தென்னந்தோப்பு பகுதியை சேர்ந்த பொற்கொடி மகன் வைரம் என்கிற பிரபு (20) என்பது தெரியவந்தது.

    பிளஸ்-1 மாணவனின் பாட்டி வீடு கலவை அகரம் பகுதியில் உள்ளது. இங்கு, மாணவனும், அவருடைய நண்பர் பிரபுவும் அடிக்கடி சென்றனர்.

    அப்போது, ஆற்காடு மற்றும் கலவை பகுதிகளில் தொடர்ந்து பைக்குகளை திருடி பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம், வாழத்தோப்பு பகுதியில் பதுக்கியுள்ளனர்.

    திருடிய பைக்குகளை குறைந்த விலைக்கு விற்று, அந்த பணத்தில் உல்லாசமாக இருந்தனர். மது குடிப்பது, பெண்களுடன் சுற்றுவது என பணத்தை அள்ளிவீசி செலவழித்ததாக 2 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

    இதையடுத்து, ஒரு பைக்கை பறிமுதல் செய்த போலீசார் மாணவன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். பிறகு வெட்டுவானம், வாழத்தோப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வீடுகளில் சோதனையிட்டனர்.

    அங்கு 18 திருட்டு பைக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மாணவன் உள்பட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திண்டுக்கல் அருகே திருமணத்திற்கு பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை செங்குறிச்சி சடையம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த உறவினரான பிளஸ்-1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதுநாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். ஆனால் உறவு முறையில் லட்சுமணன் அந்த பெண்ணுக்கு சித்தப்பா என்பதால் உறவினர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் லட்சுமணன் அந்த பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை லட்சுமணன் திருமண ஆசை காட்டி கடத்திச்சென்றார். அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்திய லட்சுமணனை தேடி வருகின்றனர்.

    ஜேடர்பாளையத்தில் கடத்தப்பட்ட பிளஸ்-1 மாணவியை போலீசார் மீட்டனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற இம்மாணவி இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர், மகளை பள்ளி, உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் மகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் மாணவி வைத்துள்ள செல்போனை சைபர் கிரைம் போலீசார் கணினி மூலம் ஆய்வு செய்த போது, ஏற்காட்டில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதையடுத்து போலீசார் ஏற்காட்டிற்கு சென்று மாணவியை பத்திரமாக மீட்டனர். அவரை ஏற்காடு, கொலக்கூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (21) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

    போலீசார் விசாரிக்கையில், மாணவி வைத்துள்ள செல்போனில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக விஜயகுமாரின் செல்போனுக்கு அழைப்பு போய் உள்ளது. தவறுதலாக அழைப்பு வந்து விட்டது என்று கூறிய பிறகும், விஜயகுமார் கேட்காமல் தொடர்ந்து செல்போனில் கால் செய்து பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர், ஆசை வார்த்தை காட்டி ஜேடர் பாளையத்துக்கு சென்று மாணவியை விஜயகுமார் கடத்திச் சென்றது தெரியவந்தது. விஜயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வடமதுரை அருகே பரீட்சையில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வடமதுரை:

    வடமதுரை அருகே காணப்பாடியைச் சேர்ந்தவர் செல்வம் மகள் புவனேஸ்வரி (வயது 16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளியில் பரீட்சை நடந்தது. இதில் புவனேஸ்வரி குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்ட புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×