search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition to collector"

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.
    • 50 ஆண்டுகளுக்கு மேலாக 22 குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர். இதில் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட சன்னியாசிபேட்டை ஊராட்சி சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது - 

    எங்கள் பகுதியில் அய்யனார் கோவில் அருகே குளக்கரை நீர்நிலை புறம்போக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 22 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். மேலும் ஊராட்சி சார்பாக குடிநீர், வீட்டு வரி போன்றவற்றை பல ஆண்டுகளாக கட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, மின்சார இணைப்பு பெற்று வசித்து வருகின்றோம். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி குளக்கரைக்கு அருகில் வசிக்கும் எங்களை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அளிக்க உள்ளனர். ஆகையால் எங்களுக்கு மாற்றுஇடம் வேண்டும். மேலும் இந்த இடத்தை விட்டால் வாழ்வாதாரத்திற்கு வீடு இடம் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட இந்த கிராம பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கி அதன் பிறகு காலி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • களக்காடு பேரூராட்சி கடந்த 12.09.2021 அன்று 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
    • களக்காடு நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்படாமல் தொடர்ந்து பொறுப்பு ஆணையாளர் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்

    களக்காடு:

    நெல்லை மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் களந்தை சித்திக் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நிரந்தர ஆணையாளர்

    களக்காடு பேரூராட்சி கடந்த 12.09.2021 அன்று 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில் நகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

    களக்காடு நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்படாமல் தொடர்ந்து பொறுப்பு ஆணையாளர் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார். இதுபோல் அலுவலக மேலாளர், பொறியாளர், நகர்நல அலுவலர், நகரமைப்பு அலுவலர் போன்ற தலைமைப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

    பொறியியல் துறையின் கீழ் உதவிப்பொறியாளர் கள், தொழில் நுட்ப உதவியாளர், டவுன் பிளானிங் ஆய்வாளர், பட வரைவாளர், ஓவர்சியர் பணியிடங்களும், நகர் நல அலுவலர் துறையின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பணியிடங்களும், நகரமைப்பு அலுவலர் துறையின் கீழ் நகரமைப்பு ஆய்வாளர், பில் கலெக்டர்கள், இளநிலை உதவியாளர்கள், கணினி திட்ட அமைப்பாளர் பணியிடங்களும் நிரப்பப்பட வில்லை.

    நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் களக்காடு நகராட்சியில் பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஒரு வருடங்களாக கட்டிட அனுமதி வழங்கப்படவில்லை. புதிய வீட்டுத்தீர்வைகள் போடப்படவில்லை. தீர்வை பெயர் மாற்ற கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் களக்காடு பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே களக்காடு நகராட்சிக்கு நிரந்தர அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று அதனையும் ஏமாற்றி வருகிறார். என்று மனுவில் கூறியுள்ளனர்.
    • கலெக்டர் ஆய்வு செய்து மோசடிகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ரெட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் தலைமையில் அந்தப் பகுதியை சார்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் தொடர்ந்து செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் இந்தக் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய பயிர் கடன் மற்றும் நகை கடன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

    மேலும் விவசாய பயிர் கடன் என்ற பெயரில் எங்கள் பகுதியில் வாழை பயிர் செய்துள்ளதாக கூறி சுமார் 98 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று அதனையும் ஏமாற்றி வருகிறார்.

    ரெட்டியபட்டி கிராமம் வானம் பார்த்த பூமியாகும். இங்கு பெய்து வரும் மழையை மட்டுமே நம்பி இங்குள்ள விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இது வரை இந்தப் பகுதியில் எந்த விவசாயியும் வாழை பயிரிட்டது கிடையாது. அந்த அளவுக்கு இந்தப் பகுதியில் தண்ணீர் கிடையாது.

    ஆனால் எங்கள் பகுதியில் 98 விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பெயரில் பல கோடி ரூபாய் கடன் பெற்று பிறகு அந்தக் கடனையும் அரசு தள்ளுபடி செய்து விட்டதாக கூறி எடுத்துக்கொண்ட சம்பவமும் இந்த பகுதியில் நடந்து உள்ளது.

    இதுபற்றி பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முதல் கூட்டுறவு துறை அமைச்சர், தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு வரை பல்வேறு புகார்களை பல்வேறு தரப்பினர் வழங்கியும் இன்றுவரை சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.

    எனவே தென்காசி மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு மோசடிகளை ஆய்வு செய்து அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

    • கந்து வட்டியில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.
    • கந்து வட்டி கொடுமையிலிருந்து காப்பாற்ற வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், செந்துறை, சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் மகன் செல்வம் இவர் ஜவுளித் தொழில் செய்து வருகிறார், இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வந்து கலெகடர் ரமண சரஸ்வதியிடம் மனு ஒன்றை அளித்தார் அதில்,

    தொழிலை மேம்படுத்த ஆதிகுடிக்காடு சங்கர் என்பவரிடம் தலா 25 லட்சம் வீதம் 75 லட்சம் கடனாக பெற்றிருந்தேன், அதனை அடைப்பதற்காக அவரிடம் நான் ரூ.1 கோடி கொடுத்து இனிமேல் நமக்குள் எந்த வரவு செலவும் கிடையாது என்று எழுதி வாங்கிக்கொண்டோம்.

    இந்நிலையில் அவர் மீண்டும என்னை மிரட்டி பணம் கேட்டார். இது தொடர்பாக நான் மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இந்த கந்து வட்டி கொடுமையிலிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

    • சிறப்பு முகாமில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய கோரி கலெடக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    • உறவினர்கள் அளித்தனர்

    திருச்சி:

    தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்தவகையில் இலங்கை, நைஜீரியா, பல்வேரியா, வங்கதேசம், இந்தோனீசியா உட்பட வெளிநாட்டினர் என மொத்தம் சுமார் 150 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.

    இவர்களை விடுதலை செய்யக்கோரி, அவர்களின் உறவினர்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர்அ வர்கள் கூறியதாவது;இலங்கை நைஜீரியா பல்வேறு பகுதிகளிலிருந்து எங்களின் உறவினர்கள் தமிழகத்திற்கு வேலை தேடி வந்த பொழுது ஏதாவது ஒரு சிறிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த தவறுக்காக தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறப்பு முகாம்களில் அவர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.

    முகாமில் உள்ள எங்களின் உறவினர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் குடும்பத்தோடு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ தீக்குளித்து எங்களுடைய உயிரை மாய்த்து விடுவோம் என்று கண்ணீரோடு தெரிவித்தனர்.

    லாலாபேட்டை அரசு பள்ளி மாணவர்கள் மாற்றப்பட்ட ஆசிரியருக்கு பதில் புதிய ஆசிரியர் வேண்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி வேளாண் பாட பிரிவு மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் கரூர் கலெக் டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:

    லாலாபேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி வேளாண் பாடப்பிரிவில் பணியாற்றிய ஆசிரியர் மாறுதல்ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் மாற்று ஆசிரியர் நியமிக்கபடவில்லை மேலும் தேர்வு நெருங்கி வருவதால் அந்தபாடம் மட்டும் நடத்தபடாமல் இருக்கிறது என்று மனுவில் கூறியிருந்தனர்.

    அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

    இதனை தொடர்ந்து அன்று மாலை கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கபீர் ஆகியோர் பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகளிடம்பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது, மாற்று பணியில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்து, இரண்டு நாட்களில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும். இனி தொடர்ந்து வேளாண் பாட பிரிவு செயல்படும் என்று உறுதி அளித்தார். பேச்சுவார்த்தையின் போது தலைமை ஆசிரியர் மாலா, உதவி தலைமை ஆசிரியர் மார்ட்டின் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். #tamilnews
    ×