search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி செய்ய நடவடிக்கை"

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.
    • 50 ஆண்டுகளுக்கு மேலாக 22 குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர். இதில் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட சன்னியாசிபேட்டை ஊராட்சி சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது - 

    எங்கள் பகுதியில் அய்யனார் கோவில் அருகே குளக்கரை நீர்நிலை புறம்போக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 22 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். மேலும் ஊராட்சி சார்பாக குடிநீர், வீட்டு வரி போன்றவற்றை பல ஆண்டுகளாக கட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, மின்சார இணைப்பு பெற்று வசித்து வருகின்றோம். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி குளக்கரைக்கு அருகில் வசிக்கும் எங்களை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அளிக்க உள்ளனர். ஆகையால் எங்களுக்கு மாற்றுஇடம் வேண்டும். மேலும் இந்த இடத்தை விட்டால் வாழ்வாதாரத்திற்கு வீடு இடம் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட இந்த கிராம பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கி அதன் பிறகு காலி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    ×