search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paint factory"

    • தீ விபத்தில் 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியில் ஈடுட்ட போலீசார் உள்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

    பின்னர், விபத்து குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக மிகுந்த கவலை அடைகிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். சிறிய காயம் அடைந்தோரும் தலா ரூ.20 ஆயிரமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

    தீ விபத்தில் சேதடைந்த கடைகளுக்கும், வீடுகளுக்கும் அரசு கொள்கையின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.

    மேலும், தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. குடியிருப்பு பகுதியில் இந்த தொழிற்சாலை எப்படி இயங்கியது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். விரைவில் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×