search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Procurement Station"

    • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்
    • நேற்று தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விளைவித்த அறுவடை செய்த நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக அருகாமையில் எங்கும் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெற்கு பாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிமுத்து கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையங்களில், வைரிசெட்டிப்பாளையம் 40 டன், கோட்டப்பாளையம் 80 டன், பி.மேட்டூர் 80 டன், புளியஞ்சோலை 40 டன், ஆலத்துடையான்பட்டி 40 டன், எரகுடி தெற்கு 40 டன், வடக்கு 40 டன் என நிர்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • சில மையங்களில் நெல் தேங்கியுள்ள நிலையில், கொள்முதல் திறனை அதிகரித்து, நிலைமையை சீரமைக்க, சிறுநாவலூரில் 8 வது நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையங்களில், வைரிசெட்டிப்பாளையம் 40 டன், கோட்டப்பாளையம் 80 டன், பி.மேட்டூர் 80 டன், புளியஞ்சோலை 40 டன், ஆலத்துடையான்பட்டி 40 டன், எரகுடி தெற்கு 40 டன், வடக்கு 40 டன் என நிர்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    7 மையங்களின் வாயிலாக 40 கிலோ சிப்பங்களாக 9000 சிப்பங்கள், நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், நெல் வரத்து அதிகரிப்பு காரணமாக, மாவட்ட நிர்வாகம் சிறுநாவலூரில் மையத்தை திறக்க அனுமதி வழங்கியது. சில மையங்களில் நெல் தேங்கியுள்ள நிலையில், கொள்முதல் திறனை அதிகரித்து, நிலைமையை சீரமைக்க, சிறுநாவலூரில் 8 வது நெல் கொள்முதல் மையம் துவக்கி வைக்கப்பட்டதன் மூலம் உப்பிலியபுரம் பகுதியில் நெல் கொள்முதல் திறன் நாளொன்றுக்கு 400 டன் என அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    துவக்க விழாவில், உப்பிலியபுரம் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாமுத்துசெல்வன், திமுக ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், நகரசெயலாளர் வெள்ளையன், முன்னாள் தலைவர் சூர்யகலாஇளங்கோவன், சிறுநாவலூர் ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், உதவிதலைவர் பாஸ்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் வேதனை
    • கொள்முதல் செய்யப்படும் தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த செட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனால் இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை இடைத்தரகர் இல்லாமல் நல்ல லாபகரமான விலைக்கு விற்று பயனடைந்து வருகின்றனர்.

    இதில் கொள்முதல் செய்யப்படும் தேதி நேற்று கடைசி என நெல் கொள்முதல் செய்யும் மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் மழை, வெயிலால் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டையின்நிலை என்ன வென்று தெரியவில்லை.இதனால் விவாசிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் கொள்முதல் செய்யப்படும் தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×