என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
கல்லிடைக்குறிச்சி அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
- கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்
- நேற்று தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விளைவித்த அறுவடை செய்த நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக அருகாமையில் எங்கும் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெற்கு பாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிமுத்து கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.