search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி நாவலூரில் அரசு நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
    X

    திருச்சி நாவலூரில் அரசு நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

    • அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையங்களில், வைரிசெட்டிப்பாளையம் 40 டன், கோட்டப்பாளையம் 80 டன், பி.மேட்டூர் 80 டன், புளியஞ்சோலை 40 டன், ஆலத்துடையான்பட்டி 40 டன், எரகுடி தெற்கு 40 டன், வடக்கு 40 டன் என நிர்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • சில மையங்களில் நெல் தேங்கியுள்ள நிலையில், கொள்முதல் திறனை அதிகரித்து, நிலைமையை சீரமைக்க, சிறுநாவலூரில் 8 வது நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையங்களில், வைரிசெட்டிப்பாளையம் 40 டன், கோட்டப்பாளையம் 80 டன், பி.மேட்டூர் 80 டன், புளியஞ்சோலை 40 டன், ஆலத்துடையான்பட்டி 40 டன், எரகுடி தெற்கு 40 டன், வடக்கு 40 டன் என நிர்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    7 மையங்களின் வாயிலாக 40 கிலோ சிப்பங்களாக 9000 சிப்பங்கள், நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், நெல் வரத்து அதிகரிப்பு காரணமாக, மாவட்ட நிர்வாகம் சிறுநாவலூரில் மையத்தை திறக்க அனுமதி வழங்கியது. சில மையங்களில் நெல் தேங்கியுள்ள நிலையில், கொள்முதல் திறனை அதிகரித்து, நிலைமையை சீரமைக்க, சிறுநாவலூரில் 8 வது நெல் கொள்முதல் மையம் துவக்கி வைக்கப்பட்டதன் மூலம் உப்பிலியபுரம் பகுதியில் நெல் கொள்முதல் திறன் நாளொன்றுக்கு 400 டன் என அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    துவக்க விழாவில், உப்பிலியபுரம் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாமுத்துசெல்வன், திமுக ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், நகரசெயலாளர் வெள்ளையன், முன்னாள் தலைவர் சூர்யகலாஇளங்கோவன், சிறுநாவலூர் ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், உதவிதலைவர் பாஸ்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×