search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Owaisi"

    இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என மஜ்லிஸ்கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
    ஐதராபாத்:

    இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி, இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக இம்ரான் கான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.


    இந்தியா போன்ற சிறந்த நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதற்கு இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என்று ஒவைசி கூறினார்.

    தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan 
    நகரங்கள் பெயரை மாற்றுவதோடு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பெயரையும் மாற்ற வேண்டும் என்று மஜ்லிஷ் கட்சி எம்.பி. ஓவைசி கூறியுள்ளார். #Owaisi​ #BJP #AmitShah

    ஐதராபாத்:

    உத்தரபிரதேசம் உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் முகலாயர் ஆட்சி காலங்களில் சூட்டப்பட்ட நகரங்களின் பெயர்களை மாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு 25-க்கும் மேற்பட்ட நகரங்களின் பெயர் இதுவரை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மஜ்லிஷ் கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான ஓவைசி தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பெயர் மாற்றம் பிரச்சினையை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் பல நகரங்களுக்கு ஏற்கனவே இருக்கும் பெயர்களை தொடர்ந்து மாற்றி வருகிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் பெயர் அமித் ஷா என்று உள்ளது.

    இதில் ஷா என்பது பெர்சிய (ஈரான்) பெயர் ஆகும். எனவே, ஷா என்ற பெயரை அவர் வைத்துக் கொள்ள கூடாது.


    இதனால் அமித் ஷா தனது பெயரையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் மாடுகள் கொடுப்போம் என்று கூறுகிறார்கள்.

    மாட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக மாடு கொடுக்கப் போகிறார்களா? என்னிடம் மாட்டை கொடுத்தால் நான் மரியாதை கொடுக்க முடியுமா?

    ஒவ்வொரு மாடும் தினமும் 16 கிலோ தீவனம் சாப்பிடும். இவர்கள் ஒரு லட்சம் மாடுகள் கொடுத்தால் தினமும் 16 லட்சம் கிலோ உணவு தேவைப்படும். இவ்வளவு உணவுக்கு எங்கே போவது?

    நான் உண்மையை பேசினால் நான் அவதூறாக பேசுவதாக கூறுவார்கள். நான் எதார்த்தத்தைதான் கூறுகிறேன்.

    தெலுங்கானா மாநிலம் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

    இவ்வாறு ஓவைசி பேசினார். #Owaisi​ #BJP #AmitShah

    முத்தலாக் ஒழிப்பு அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி, கணவர்களால் கைவிடப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் சட்டம் தேவை என குறிப்பிட்டுள்ளார். #Owaisi #TripleTalaqBill
    ஐதராபாத்:

    முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் ஐதரபாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒவைசி, ’இந்த அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. அவர்களுக்கான நீதியை இந்த அவசர சட்டம் அளிக்காது. இஸ்லாம் மதத்தில் திருமணம் என்பது இருவருக்கு இடையிலான பொது ஒப்பந்தம் போன்றது. இதற்குள் தண்டனைக்குரிய கிரிமினல் சட்டங்களை நுழைப்பது தவறானது.

    முஸ்லிம்களுக்கு மட்டும் எதிராக உருவாக்கப்பட்ட இந்த அவசர சட்டமானது ‘அனைவரும் சமம்’ என்னும் அரசியலைப்பு சட்டத்துக்கு உட்பட்டது அல்ல. அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் மகளிர் அமைப்புகள் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடர வேண்டும்’ என குறிப்பிட்டார்.



    இதற்கு ஒரு அவசர சட்டம் இயற்றியதுபோல் கணவர்களால் கைவிடப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்க ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பிரதமரை நான் வலியுறுத்துகிறேன். தேர்தல் காலத்தில் இவர்களின் கணவர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் தாங்கள் திருமணம் ஆனவர்கள், ஆனால், மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கின்றனர்.

    எனவே, இப்படி கைவிட்டப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பிரதமர் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்' எனவும் ஒவைசி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் திருமணமானவர், ஆனால், தனியாக வாழ்பவர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அவரை மறைமுகமாக தாக்கும் நோக்கத்தில் ஒவைசி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Owaisi #TripleTalaqBill #24lakhmarriedwomen
    ×