என் மலர்

  செய்திகள்

  கணவருடன் வாழாத 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் தேவை - பிரதமருக்கு ஒவைசி வலியுறுத்தல்
  X

  கணவருடன் வாழாத 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் தேவை - பிரதமருக்கு ஒவைசி வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்தலாக் ஒழிப்பு அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி, கணவர்களால் கைவிடப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் சட்டம் தேவை என குறிப்பிட்டுள்ளார். #Owaisi #TripleTalaqBill
  ஐதராபாத்:

  முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

  இந்த நடவடிக்கைக்கு அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் ஐதரபாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒவைசி, ’இந்த அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. அவர்களுக்கான நீதியை இந்த அவசர சட்டம் அளிக்காது. இஸ்லாம் மதத்தில் திருமணம் என்பது இருவருக்கு இடையிலான பொது ஒப்பந்தம் போன்றது. இதற்குள் தண்டனைக்குரிய கிரிமினல் சட்டங்களை நுழைப்பது தவறானது.

  முஸ்லிம்களுக்கு மட்டும் எதிராக உருவாக்கப்பட்ட இந்த அவசர சட்டமானது ‘அனைவரும் சமம்’ என்னும் அரசியலைப்பு சட்டத்துக்கு உட்பட்டது அல்ல. அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் மகளிர் அமைப்புகள் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடர வேண்டும்’ என குறிப்பிட்டார்.  இதற்கு ஒரு அவசர சட்டம் இயற்றியதுபோல் கணவர்களால் கைவிடப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்க ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பிரதமரை நான் வலியுறுத்துகிறேன். தேர்தல் காலத்தில் இவர்களின் கணவர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் தாங்கள் திருமணம் ஆனவர்கள், ஆனால், மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கின்றனர்.

  எனவே, இப்படி கைவிட்டப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பிரதமர் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்' எனவும் ஒவைசி தெரிவித்துள்ளார்.

  பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் திருமணமானவர், ஆனால், தனியாக வாழ்பவர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அவரை மறைமுகமாக தாக்கும் நோக்கத்தில் ஒவைசி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Owaisi #TripleTalaqBill #24lakhmarriedwomen
  Next Story
  ×