search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "organ donation"

    பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம்.

    தமிழக அரசு

    தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதாரை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.



    மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு மாநில சுகாதாரதுறை மந்திரி வீணா ஜார்ஜ் பாராட்டு தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஒச்சிரா பகுதியை சேர்ந்தவர் உஷா போபன்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா போபனும், அவரது கணவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் உஷா போபன் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த உஷா போபனின் உடல் நிலை மிகவும் மோசமானது. நேற்று அவர் மூளை சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    உஷா போபன் மூளைசாவு அடைந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

    இதுபற்றி மாநில சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே உஷா போபனின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண் ஆகியவற்றை ஆபரேசன் செய்து அகற்றி தேவைப்படுவோருக்கு பொருத்த நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து மாநில அரசின் மிருத்தசஞ்சீவினி திட்டத்தின் கீழ் உஷா போபனின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டது. கண், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பொருத்திய தன்மூலம் 5 பேர் புதுவாழ்வு பெற்றனர்.

    மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு மாநில சுகாதாரதுறை மந்திரி வீணா ஜார்ஜ் பாராட்டு தெரிவித்தார்.

    பெண்ணின் உறவினர்கள் மிகுந்த மன கஷ்டத்தில் இருக்கும்போது , இதுபோன்ற முடிவை எடுத்து உறுப்பு தானம் செய்துள்ளனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றார். 

    மூளைச்சாவு அடைந்த ஈரோட்டை சேர்ந்த பெண்ணின் உடல் உறுப்பு தானமாக வழங்கியதால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
    கோவை:

    ஈரோடு மாவட்டம், பெத்தாம் பாளையத்தில் வசித்து வருபவர் முத்துசாமி. இவரது மனைவி இந்திராணி (வயது 50) இவர் கடந்த15-ந் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தார். உடனடியாக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திராணி உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் முத்துச்சாமி முன் வந்தார். இந்திராணி சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல், ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.

    இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர். நல்லா ஜி பழனிசாமி கூறுகையில் மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய இந்திராணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
    தோணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, கபாலி படத்தின் மூலம் பிரபலமான ராதிகா ஆப்தே தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். #RadhikaApte
    இந்தி நடிகை ராதிகா ஆப்தே தோணி, தமிழில் வெற்றி செல்வன், அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்தது வெகுவாக பாராட்டப்பட்டது. வெறும் நடிப்பதோடு அல்லாமல் சமூக விழிப்புணர்வு வி‌ஷயங்களிலும் ராதிகா ஈடுபட்டு வருகிறார்.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அடுத்ததாக இறப்புக்குப் பிறகு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

    உடல் உறுப்பு தானத்திற்கு பதிவிட்ட கொடையாளி என்பதற்கான அடையாள அட்டையை டுவிட்டரில் பதிவிட்டு இதை செய்வதற்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆனது என பகிர்ந்துள்ளார். கமல்ஹாசன் உள்ளிட்ட சில தமிழ் திரை பிரபலங்களும் தங்கள் உடலை தானம் செய்துள்ளனர். #RadhikaApte

    ×