search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உஷா போபன்
    X
    உஷா போபன்

    கேரளாவில் கணவருடன் சென்ற போது விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

    மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு மாநில சுகாதாரதுறை மந்திரி வீணா ஜார்ஜ் பாராட்டு தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஒச்சிரா பகுதியை சேர்ந்தவர் உஷா போபன்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா போபனும், அவரது கணவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் உஷா போபன் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த உஷா போபனின் உடல் நிலை மிகவும் மோசமானது. நேற்று அவர் மூளை சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    உஷா போபன் மூளைசாவு அடைந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

    இதுபற்றி மாநில சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே உஷா போபனின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண் ஆகியவற்றை ஆபரேசன் செய்து அகற்றி தேவைப்படுவோருக்கு பொருத்த நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து மாநில அரசின் மிருத்தசஞ்சீவினி திட்டத்தின் கீழ் உஷா போபனின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டது. கண், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பொருத்திய தன்மூலம் 5 பேர் புதுவாழ்வு பெற்றனர்.

    மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதற்கு மாநில சுகாதாரதுறை மந்திரி வீணா ஜார்ஜ் பாராட்டு தெரிவித்தார்.

    பெண்ணின் உறவினர்கள் மிகுந்த மன கஷ்டத்தில் இருக்கும்போது , இதுபோன்ற முடிவை எடுத்து உறுப்பு தானம் செய்துள்ளனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றார். 

    Next Story
    ×