search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "omicron virus"

    அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    வெளிநாடுகளில் ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவன குறைவாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

    ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    உலகமெங்கும் மிரட்டிய கொரோனா வைரஸ் தொற்று இப்போது உருமாறி, புதிய வகை ஒமிக்ரான் தொற்றாக பரவ தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் கொரோனா வீரியம் மிக்கது என்றும், இதன் பாதிப்பு முந்தைய பாதிப்பை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

    இந்தநிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவல் இல்லை. என்றாலும் மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோர் 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

    ஒமிக்ரான் வைரஸ்

    குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது.
    ஆம்ஸ்டர்டாம்:

    ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.  ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

    அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோன்று, தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது.  இதில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என டச்சு நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

    ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.
    காத்மண்டு:

    கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவ தொடங்கியுள்ளது.  ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

    அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

    வைரஸ்

    இந்த நிலையில், ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.  அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
    டெல் அவிவ்:

    கொரோனா வைரஸ் தொற்று தோன்றி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் அந்த கொடிய வைரஸ் உலக நாடுகள் மீதான தனது கோரப்பிடியை தளர்த்தவில்லை.

    ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. எனினும் தடுப்பூசி எனும் பெரும் ஆயுதம் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறது.

    இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தனது எல்லையை வேகமாக விரித்து வருகிறது.

    தென்ஆப்பிரிக்காவை தவிர்த்து, இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    அதில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு இதுவரை 8 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்து வருகின்றன.

    இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளது.

    விமானம்

    அனைத்து நாடுகளை சேர்ந்த பயணிகளும் இஸ்ரேல் வருவதற்கு 14 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    ஒமிக்ரான் காரணமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை அறிவித்த முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் மந்திரி சபை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் இந்த பயணத்தடை அமலுக்கு வந்தது.

    இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்பு தடயங்களை கண்காணிக்க சர்ச்சைக்குரிய தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆனால் இது மக்களின் தனியுரிமையை மீறும் செயல் என இஸ்ரேலின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இதற்கிடையே அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன.

    பரிசோதனை முடிவு வந்தபிறகே விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும், அல்லது இணைப்பு விமானத்தில் பயணிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் கவலை தரக்கூடியது என்று அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஆங்காங், பெல்ஜியம் போன்ற நாடுகளில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு உள்ளது. இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளுடன் விமான போக்குவரத்துக்கு பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    இந்தியாவில் இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச விமான போக்குவரத்து தடையை நீட்டிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    விமான பயணிகள்

    இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், வெளியாட்டு பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. 

    அதில், ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ள நாடுகள் மற்றும் அந்த வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வருவோர், விமான நிலையத்தில் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும், அதன் முடிவு வந்தபிறகே விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும், அல்லது இணைப்பு விமானத்தில் பயணிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படும் நாடுகளாக இந்தியா பட்டியலிட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகள் புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 

    இந்த பட்டியலில் உள்ள நாடுகளைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் வந்த பிறகு 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும். அவர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்படுவார்கள். 

    இந்த நிலையான வழிகாட்டு நடைமுறை டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். 
    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கிய நேரத்தில் கடந்த மார்ச் 2020 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இந்த தடை வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அதே நேரம் 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விமான சேவை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக சிக்கிக் கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காக இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பழையபடி சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து விமான போக்குவரத்து அமைச்சகம் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    இதை தொடர்ந்து அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

    இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

    உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் கவலை தரக்கூடியது என்று அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங், பெல்ஜியம் போன்ற நாடுகளில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு உள்ளது.

    இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளுடன் விமான போக்குவரத்துக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து தடையை நீட்டிக்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சர்வதேச விமான சேவையை வருகிற 15-ந் தேதி முதல் தொடங்கும் முடிவை பரிசீலனை செய்யுமாறு மோடி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    பிரதமரின் இந்த அறிவுறுத்தலின்பேரில் சர்வதேச விமான போக்குவரத்து தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் விரைவில் இதற்கான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவுக்குள் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆலோசனைகள் வழங்கி உள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதை கட்டுப்படுத்த மருத்துவத்துறை போராடிய போது ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பினாஸ் என்று உருமாற்றம் அடைந்து பரவியது. அதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசிகளும் வந்துவிட்டன. 

    இந்த நிலையில் இப்போது புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகை வைரஸ் அதிக வீரியத்துடன் உள்ளது. இதற்கு முன்பு பரவிய கொரோனாவைவிட கூடுதல் பாதிப்பை ஏற்படுத் தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தடுப்பூசிக்கு கட்டுப்படுமா? என்பது பற்றி ஆய்வுகள் நடந்து வருகிறது.

    இந்தியாவுக்குள் இந்த வைரஸ் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆலோசனைகள் வழங்கி உள்ளது. நாடு முழுவதும் சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    புதியவகை வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்கா வில் 66 பேருக்கும், வாரங்காங்கில் 6 பேருக்கும், போட்ஸ்வானாவில் 2 பேருக்கும், இத்தாலியில் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூர், மலேசியா, பிரேசில், நியூசிலாந்து, இஸ்ரேல் உள்பட மொத்தம் 12 நாடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 2 தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும் அவர்களுக்கு பரிசோதனை கட்டாயம். அத்துடன் அவர்கள் 8 நாட்கள் வீட்டுத்தனிமையிலும் வைகப்படுவார்கள். அதன் பிறகு பரிசோதித்து கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களிலும் ஒரு உதவி திட்ட அதிகாரி தலைமையில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

    இந்த வைரசை நினைத்து பயம் கொள்ள தேவையில்லை. தமிழத்தை பொருத்தவரை உருமாற்றம் அடையும் கொரோனா வைரசையும் பகுப்பாய்வு செய்து அதிகபட்சம் 7 நாட்களில் கண்டு பிடிக்கும் வசதி உள்ளது. ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை தமிழகத்தில் பரவியதில் 90 சதவீதம் டெல்டா வகை வைரஸ்தான். பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதிய வகை வைரஸ், இந்தியாவில், 3-வது அலையை தூண்டலாம் என்று தேசிய தடுப்பூசி திட்ட ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.
    கொல்கத்தா:

    கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் நாடு தீவிரமாக உள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு, இறப்பு, ஆஸ்பத்திரி சேர்க்கை என எல்லாமே கட்டுக்குள் இருக்கிறது. தடுப்பூசி திட்டமும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

    இந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை வைரசான ஒமிக்ரான் வைரஸ், உலகமெங்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த புதிய வகை வைரசால் 3-வது அலை இனி வரும் நாட்களில் உருவாகலாம் என்று தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் எச்சரித்து இருக்கிறார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் என்பது ஒற்றை இழை கொண்ட ஆர்.என்.ஏ. வைரசாகும். பிறழ்வுகள் (உரு மாற்றங்கள்) மரபணு வரிசையில் ஏற்படுகிற மாற்றங்கள் ஆகும். அவை வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இயல்பான ஒன்றுதான். ஒரு வைரஸ் எளிதில் பாதிக்கக்கூடிய ஒரு உடலில் நுழைகிறபோது, அது நகல் எடுக்கத்தொடங்குகிறது. நோய்த்தொற்றின் பரவலுடன் நகலெடுப்பதும் அதிகரிக்கிறது. ஒரு வைரஸ் கொண்டிருக்கிற பிறழ்வு, உருமாற்றம் ஆகும்.

    புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி.1.1.529 வைரஸ், இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தலாம்.

    தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ். தற்போதுள்ள உருமாறிய வைரஸ்களை விட ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வுகளை கொண்டுள்ளது என்பதால் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

    தற்போது வரையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என 4 வைரஸ்கள் கவலைக்குரிய வைரஸ்களாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    தடுப்பூசி

    தடுப்பூசி திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிற நிலையில், 3-வது அலையில் இருந்து நோய் எதிர்ப்புச்சக்தியை பெற்றிருக்கிறோம் என நினைத்தவர்களுக்கும், நோய்த்தொற்று ஏற்பட்டபோது அறிகுறி இல்லாமல் இருந்தவர்களுக்கும் இந்த வைரஸ் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

    தற்போது இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், புதிய வகை வைரசால் 3-வது அலை உருவாகலாம். தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். சில மாநிலங்களில் நிலைமை மோசமாகலாம்.

    மற்ற உருமாறிய வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தில் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் இருக்கின்றன. இது தடுப்பூசிகள் திறம்பட செயல்படுவதற்கு முக்கியம் ஆகும்.

    இந்த வைரஸ் டெல்டாவிடம் இருந்து அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பது கவலை அளிக்கிறது. டெல்டா வைரஸ் அதிகமாக பரவுகிற தன்மையை கொண்டது.

    புதிய வைரசை பொறுத்தமட்டில் அதன் பரவும் தன்மை, தடுப்பூசி செயல்திறன் குறித்து எந்த முடிவான ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றியும் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×