search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமை
    X
    கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமை

    வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமை

    ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    உலகமெங்கும் மிரட்டிய கொரோனா வைரஸ் தொற்று இப்போது உருமாறி, புதிய வகை ஒமிக்ரான் தொற்றாக பரவ தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் கொரோனா வீரியம் மிக்கது என்றும், இதன் பாதிப்பு முந்தைய பாதிப்பை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

    இந்தநிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவல் இல்லை. என்றாலும் மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோர் 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

    ஒமிக்ரான் வைரஸ்

    குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×